கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 660 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 591 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 69 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 660 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 144 கிராம் 962 மில்லி கிராம் ஹெராயின், பனி 328 கிராம் 381 மி.கி, கஞ்சா 5 கிலோ 397 கிராம், மாவா 24 கிராம் 022 மி.கி, துலே 6 கிராம் 077 மி.கி, மதன மோதக 44 கிராம், 201 மாத்திரைகள், 1,866 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 591 சந்தேக நபர்களில் 02 சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றப்பிரிவுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 69 சந்தேக நபர்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 6 சந்தேகநபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகள் 51 பேரும், கைரேகை மூலம் கைது செய்யப்பட்ட 04 பேரும், குற்றங்களுக்காக 08 சந்தேகநபர்களும் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடரும் 'யுக்திய' நடவடிக்கை. 660 சந்தேக நபர்கள் கைது. கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 660 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 591 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 69 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 660 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 144 கிராம் 962 மில்லி கிராம் ஹெராயின், பனி 328 கிராம் 381 மி.கி, கஞ்சா 5 கிலோ 397 கிராம், மாவா 24 கிராம் 022 மி.கி, துலே 6 கிராம் 077 மி.கி, மதன மோதக 44 கிராம், 201 மாத்திரைகள், 1,866 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 591 சந்தேக நபர்களில் 02 சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், குற்றப்பிரிவுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 69 சந்தேக நபர்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 6 சந்தேகநபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகள் 51 பேரும், கைரேகை மூலம் கைது செய்யப்பட்ட 04 பேரும், குற்றங்களுக்காக 08 சந்தேகநபர்களும் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.