• Apr 23 2026

தொடரும் யானை அச்சுறுத்தல் - உயிர் அச்சத்தில் மக்கள் ; உரிய தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்!

shanu / Jan 13th 2026, 4:20 pm
image

கந்தளாய் பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும், கிராமத்தைச் சுற்றி மின் வேலி அமைக்கக் கோரியும் கந்தளாய் 93 ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.


திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள 93 ம் கட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில்  இந்த ஆரப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான  மக்கள் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


காட்டு யானைகள் தொடர்ந்து கிராமத்திற்குள் புகுந்து நெல் வயல்கள் மற்றும் தென்னை, வாழை போன்றவை அழித்து வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


இரவு நேரங்களில் யானைகள் வீடுகளுக்கு அருகிலேயே வருவதால், உயிருக்குப் பயந்த நிலையில் வாழ்வதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.


மின்சார வேலி கிராமத்திற்கு மிக அருகில் வரை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 93 ம் கட்டை  கிராமத்தை உள்ளடக்கியதாக அது அமைக்கப்படாததால், யானைகள் எளிதாகக் கிராமத்திற்குள் நுழைகின்றன.


காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து கிராமத்தைப் பாதுகாக்க நிரந்தரத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.


தற்போதுள்ள மின் வேலியை நீடித்து, 93 ம் க்கட்டை  கிராமத்தையும் முழுமையாக உள்ளடக்கும் வகையில் மின் வேலி அமைக்கப்பட வேண்டும்.


தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என மக்கள் தெரிவித்தனர்.

தொடரும் யானை அச்சுறுத்தல் - உயிர் அச்சத்தில் மக்கள் ; உரிய தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் கந்தளாய் பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும், கிராமத்தைச் சுற்றி மின் வேலி அமைக்கக் கோரியும் கந்தளாய் 93 ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள 93 ம் கட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில்  இந்த ஆரப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான  மக்கள் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.காட்டு யானைகள் தொடர்ந்து கிராமத்திற்குள் புகுந்து நெல் வயல்கள் மற்றும் தென்னை, வாழை போன்றவை அழித்து வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.இரவு நேரங்களில் யானைகள் வீடுகளுக்கு அருகிலேயே வருவதால், உயிருக்குப் பயந்த நிலையில் வாழ்வதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.மின்சார வேலி கிராமத்திற்கு மிக அருகில் வரை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 93 ம் கட்டை  கிராமத்தை உள்ளடக்கியதாக அது அமைக்கப்படாததால், யானைகள் எளிதாகக் கிராமத்திற்குள் நுழைகின்றன.காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து கிராமத்தைப் பாதுகாக்க நிரந்தரத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.தற்போதுள்ள மின் வேலியை நீடித்து, 93 ம் க்கட்டை  கிராமத்தையும் முழுமையாக உள்ளடக்கும் வகையில் மின் வேலி அமைக்கப்பட வேண்டும்.தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என மக்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement