யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் மானாண்டி பகுதியில் பருத்தித்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து பொலிஸ், கடற்படை, பருத்தித்துறை பிரதேச சபை ஆகியோர் ஆகியோரால் இன்று டெங்கு நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்கான டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் சுகாதார ஆலைசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9.00 மணியளவில் திக்கம் கலாச்சார மத்திய நிலைத்திலிருந்து ஆரம்பமான டெங்கு கட்டுப்படுத்தும் நடவடிக்கை மானாண்டி சந்தைவரை தொடர்ந்தது.
அங்கு சமூக பொறுப்பில்லாது வீசப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் உட்பட டெங்கு நுளம்பு உற்பத்தியாகுமிடங்களும் இல்லாதொழிக்கப்பட்டது.
அத்தோடு ஒலிபெருக்கியில் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான சுகாதார விழி்ப்புணர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோகதர் பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிசார், கடற்படையினர், பருத்தித்துறை பிரதேச சபையினர், பருத்தித்திறை சுகாதார வைத்திய அதிகாரிபிரிவு, பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு நோய் அதிகளவில் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது
பொலிசாரின் ஏற்பாட்டில் சுகாதார வைத்திய அதிகாரியுடன் இணைந்து திக்கம் பகுதியில் டெங்கு கட்டுப்பாடு.samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் மானாண்டி பகுதியில் பருத்தித்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து பொலிஸ், கடற்படை, பருத்தித்துறை பிரதேச சபை ஆகியோர் ஆகியோரால் இன்று டெங்கு நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்கான டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் சுகாதார ஆலைசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.இன்று காலை 9.00 மணியளவில் திக்கம் கலாச்சார மத்திய நிலைத்திலிருந்து ஆரம்பமான டெங்கு கட்டுப்படுத்தும் நடவடிக்கை மானாண்டி சந்தைவரை தொடர்ந்தது.அங்கு சமூக பொறுப்பில்லாது வீசப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் உட்பட டெங்கு நுளம்பு உற்பத்தியாகுமிடங்களும் இல்லாதொழிக்கப்பட்டது.அத்தோடு ஒலிபெருக்கியில் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான சுகாதார விழி்ப்புணர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.இதில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோகதர் பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிசார், கடற்படையினர், பருத்தித்துறை பிரதேச சபையினர், பருத்தித்திறை சுகாதார வைத்திய அதிகாரிபிரிவு, பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு நோய் அதிகளவில் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது