• Sep 20 2024

பிரதமர் விவகாரத்தால் ஆளும் தரப்புக்குள் வெடித்தது சர்ச்சை!

Chithra / Feb 5th 2023, 1:02 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவது தொடர்பில் ஆளும் தரப்புக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்குத் தினேஷ் குணவர்த்தன தயார் நிலையில் இருக்கின்றார் எனவும், எனவே, மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க வேண்டும் எனவும் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.


எனினும், அரசுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக் கட்சிகள் உட்பட மேலும் சில தரப்புகள் இதற்கு எதிர்ப்புத்  தெரிவித்துள்ளன.

தினேஷ் குணவர்த்தனவை நீக்கிவிட்டு, மஹிந்தவைக் கொண்டுவந்தால் தேவையற்ற அரசியல் குழப்பம் உருவாகக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் பிரதமர் விவகாரம் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் குழப்ப நிலை உருவாகியுள்ளது.

பிரதமர் விவகாரத்தால் ஆளும் தரப்புக்குள் வெடித்தது சர்ச்சை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவது தொடர்பில் ஆளும் தரப்புக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்குத் தினேஷ் குணவர்த்தன தயார் நிலையில் இருக்கின்றார் எனவும், எனவே, மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க வேண்டும் எனவும் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.எனினும், அரசுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக் கட்சிகள் உட்பட மேலும் சில தரப்புகள் இதற்கு எதிர்ப்புத்  தெரிவித்துள்ளன.தினேஷ் குணவர்த்தனவை நீக்கிவிட்டு, மஹிந்தவைக் கொண்டுவந்தால் தேவையற்ற அரசியல் குழப்பம் உருவாகக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதனால் பிரதமர் விவகாரம் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் குழப்ப நிலை உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement