• May 17 2024

டயகம- தலவாக்கலை நேர அட்டவணையில் சர்ச்சை!!

crownson / Dec 2nd 2022, 3:35 pm
image

Advertisement

டயகம நகரில் இருந்து தலவாக்கலை நகரத்தை நோக்கி செல்லும் தனியார் பேருந்து நேர அட்டவணையில் ஏற்பட்ட சர்ச்சை  நிலையாலும், மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபை அதிகாரிகளின் அசமந்தப் போக்கினாலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், மற்றும் நடத்துனர்கள், குறிப்பாக குறித்து போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள், அரசாங்க ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் இவ் விடயம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதை அடுத்து இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாணம் பிரதான செயலாளருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொட்டகலை CLF வளாகத்தில் நடைபெற்றது

இதன் போது பேருந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிப்படையாக அதிகாரிகளுக்கு தெரிவிக்பட்டது.

மத்திய மாகாண போக்குவரத்து அதிகாரிகள் இதற்குப் பிறகும் இப்படியான இடையூறுகளை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர்.

மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபை அதிகாரிகள் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாரபட்சமான முறையில் நடந்து கொள்ளக் கூடாது எனவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.

கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் தேசிய அமைப்பாளர் எம் பி சக்திவேல் மற்றும் உப தலைவர் சச்சிதானந்தன் மேலும் அக்கரவர்த்தனை பிரதேச சபை தலைவர் ராமன் கோபால் மற்றும் மத்திய மாகாண போக்குவரத்து உயர் அதிகாரிகளும்,பஸ் உரிமையாளர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

டயகம- தலவாக்கலை நேர அட்டவணையில் சர்ச்சை டயகம நகரில் இருந்து தலவாக்கலை நகரத்தை நோக்கி செல்லும் தனியார் பேருந்து நேர அட்டவணையில் ஏற்பட்ட சர்ச்சை  நிலையாலும், மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபை அதிகாரிகளின் அசமந்தப் போக்கினாலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், மற்றும் நடத்துனர்கள், குறிப்பாக குறித்து போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள், அரசாங்க ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.இந்நிலையில் இவ் விடயம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதை அடுத்து இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாணம் பிரதான செயலாளருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொட்டகலை CLF வளாகத்தில் நடைபெற்றதுஇதன் போது பேருந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிப்படையாக அதிகாரிகளுக்கு தெரிவிக்பட்டது.மத்திய மாகாண போக்குவரத்து அதிகாரிகள் இதற்குப் பிறகும் இப்படியான இடையூறுகளை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர். மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபை அதிகாரிகள் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாரபட்சமான முறையில் நடந்து கொள்ளக் கூடாது எனவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது. கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் தேசிய அமைப்பாளர் எம் பி சக்திவேல் மற்றும் உப தலைவர் சச்சிதானந்தன் மேலும் அக்கரவர்த்தனை பிரதேச சபை தலைவர் ராமன் கோபால் மற்றும் மத்திய மாகாண போக்குவரத்து உயர் அதிகாரிகளும்,பஸ் உரிமையாளர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement