• Sep 22 2024

கொரோனா பரவல் எதிரொலி: கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகும் முக்கிய நாடு!

Sharmi / Jan 3rd 2023, 9:27 am
image

Advertisement

உலக நாடுகளில்  கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று  மீண்டும் அதிகரித்து வருகின்றது. 

 குறிப்பாக கொரோனா வைரஸின் ஆரம்ப இடமான சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


அதேவேளை சீனாவில் கொரோனா தொற்று உயிரிழப்புக்களும் நாளாந்தம் ஆயிரத்தை கடந்து வரும் நிலையில் சடலங்களை எரிப்பதிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலின் எதிரொலியாக பல்வேறு உலக நாடுகள் தத்தமது நாடுகளில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஆலோசனை செய்து வருகின்றனர்.



இவ்வாறான நிலையில் பிரான்ஸில் வைரஸ் தடுப்பு விதிமுறைகளை மீள நடைமுறைப்படுத்துவது பற்றிச் சிந்திக்குமாறு ஜனாதிபதி மக்ரோன் அரச உயர்மட்டத்தினரிடம் கேட்டிருக்கிறார்.

சீனா அதன் வைரஸ் ஒழிப்புக் கொள்கையைக் கைவிட்டிருப்பதை அடுத்து அங்கு திடீரெனத் தொற்றலை ஏற்பட்டுள்ளது.



சீன நிவரத்தைக் கவனத்தில் கொண்டு மக்களைப் பாதுகாப்பதற்காக பிரான்ஸிலும் ஐரோப்பிய மட்டத்திலும் முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றிச் சிந்திக்குமாறு அரசிடம் மக்ரோன் கேட்டிருக்கிறார் என்ற தகவலை எலிஸே மாளிகை வெளியிட்டிருக்கிறது.

சீனா நாட்டுப் பயணிகள் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் சில ஏற்கனவே பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கொரோனா பரவல் எதிரொலி: கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகும் முக்கிய நாடு உலக நாடுகளில்  கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று  மீண்டும் அதிகரித்து வருகின்றது.   குறிப்பாக கொரோனா வைரஸின் ஆரம்ப இடமான சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதேவேளை சீனாவில் கொரோனா தொற்று உயிரிழப்புக்களும் நாளாந்தம் ஆயிரத்தை கடந்து வரும் நிலையில் சடலங்களை எரிப்பதிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலின் எதிரொலியாக பல்வேறு உலக நாடுகள் தத்தமது நாடுகளில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஆலோசனை செய்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில் பிரான்ஸில் வைரஸ் தடுப்பு விதிமுறைகளை மீள நடைமுறைப்படுத்துவது பற்றிச் சிந்திக்குமாறு ஜனாதிபதி மக்ரோன் அரச உயர்மட்டத்தினரிடம் கேட்டிருக்கிறார்.சீனா அதன் வைரஸ் ஒழிப்புக் கொள்கையைக் கைவிட்டிருப்பதை அடுத்து அங்கு திடீரெனத் தொற்றலை ஏற்பட்டுள்ளது.சீன நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு மக்களைப் பாதுகாப்பதற்காக பிரான்ஸிலும் ஐரோப்பிய மட்டத்திலும் முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றிச் சிந்திக்குமாறு அரசிடம் மக்ரோன் கேட்டிருக்கிறார் என்ற தகவலை எலிஸே மாளிகை வெளியிட்டிருக்கிறது.சீனா நாட்டுப் பயணிகள் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் சில ஏற்கனவே பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement