நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஆலோசனை சேவை நிலையம் நேற்று (01) USAID பிரதி பணிப்பாளர் மைக்கல் ஹெய்ன்ஸ் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
USAID இன் SCORE திட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆலோசனை சேவை நிலையம் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான நுவரெலியா மாவட்டக் குழு மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்தினால் இணைந்து நடத்தப்படுகிறது.
இதன் மூலம் மாவட்ட மக்கள் போதைப்பொருள் தடுப்பு, உளவியல், குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள், நன்னடத்தை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, வெளிநாட்டு சேவைகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் ஆகிய துறைகளில் ஆலோசனை பெற முடியும்.
USAID பிரதிப் பணிப்பாளர் டெனிஸ் வெஸ்னர், SCORE செயற்திட்டத்தின் தலைவர் ஜெயதேவன் கார்த்திகேயன், நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் தினிகா கவிசேகர, நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், மகளிர் அமைப்பு பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஆலோசனை சேவை நிலையம் திறப்பு. நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஆலோசனை சேவை நிலையம் நேற்று (01) USAID பிரதி பணிப்பாளர் மைக்கல் ஹெய்ன்ஸ் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.USAID இன் SCORE திட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆலோசனை சேவை நிலையம் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான நுவரெலியா மாவட்டக் குழு மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்தினால் இணைந்து நடத்தப்படுகிறது.இதன் மூலம் மாவட்ட மக்கள் போதைப்பொருள் தடுப்பு, உளவியல், குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள், நன்னடத்தை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, வெளிநாட்டு சேவைகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் ஆகிய துறைகளில் ஆலோசனை பெற முடியும்.USAID பிரதிப் பணிப்பாளர் டெனிஸ் வெஸ்னர், SCORE செயற்திட்டத்தின் தலைவர் ஜெயதேவன் கார்த்திகேயன், நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் தினிகா கவிசேகர, நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், மகளிர் அமைப்பு பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.