• Dec 09 2024

கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் ஆரம்ப பிரிவுக்கான புதிய கிளை திறந்துவைப்பு...!

Sharmi / Jul 2nd 2024, 2:26 pm
image

கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் ஆரம்ப பிரிவுக்கான புதிய கிளை இன்றையதினம்(02) திறந்து வைக்கப்பட்டது.

வலய கல்வி அலுவலக பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம், குறித்த கிளையினை நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு தொடக்கம் உயர்தரம்  வரையான பரீட்சைகளில் அதிகூடிய சித்திகளை பெற வைப்பது தொடர்பாகவும் எதிர்காலத்தில் எவ்வாறு குறித்த அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பது பற்றி தெளிவும் வழங்கப்பட்டது.   

அத்துடன், வலயத்தின் கல்வி வளர்ச்சியை எவ்வாறு முன்னேற்றலாம் என்பது பற்றிய விசேட கலந்துரையாடல் ஒன்றும் வலய கல்வி அலுவலக பணிப்பாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆலோசனை மற்றும் தெளிவும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில், பிரதி கல்வி பணிப்பாளர் கல்வி அபிவிருத்தி பணிப்பாளர் M.M.M. அப்பாஸ், கல்வியலாளர் ஐ.நாம்தீன், ஆரம்ப பிரிவுக்கான இணைப்பாளர்  M.S.M. அனிபா, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் M.I நிஜாம்தீன் உட்பட மேலும் பல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் ஆரம்ப பிரிவுக்கான புதிய கிளை திறந்துவைப்பு. கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் ஆரம்ப பிரிவுக்கான புதிய கிளை இன்றையதினம்(02) திறந்து வைக்கப்பட்டது.வலய கல்வி அலுவலக பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம், குறித்த கிளையினை நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு தொடக்கம் உயர்தரம்  வரையான பரீட்சைகளில் அதிகூடிய சித்திகளை பெற வைப்பது தொடர்பாகவும் எதிர்காலத்தில் எவ்வாறு குறித்த அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பது பற்றி தெளிவும் வழங்கப்பட்டது.   அத்துடன், வலயத்தின் கல்வி வளர்ச்சியை எவ்வாறு முன்னேற்றலாம் என்பது பற்றிய விசேட கலந்துரையாடல் ஒன்றும் வலய கல்வி அலுவலக பணிப்பாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆலோசனை மற்றும் தெளிவும் வழங்கப்பட்டது.இந் நிகழ்வில், பிரதி கல்வி பணிப்பாளர் கல்வி அபிவிருத்தி பணிப்பாளர் M.M.M. அப்பாஸ், கல்வியலாளர் ஐ.நாம்தீன், ஆரம்ப பிரிவுக்கான இணைப்பாளர்  M.S.M. அனிபா, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் M.I நிஜாம்தீன் உட்பட மேலும் பல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement