• Oct 30 2024

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற தம்பதியினர் கைது..!!

Tamil nila / Apr 14th 2024, 7:03 am
image

Advertisement

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற தம்பதியினர்  விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வியாழன் இரவு கொழும்பு வரவிருந்த விமானத்தில் ஏறவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை குடிவரவு அதிகாரிகள் சோதனை செய்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூரை சேர்ந்த ராமச்சந்திரன் அவரது மனைவி ஹனிஷா ஆகியோரின் கடவுச்சீட்டை சோதனை செய்தபோது, இருவரும் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பயணம் செய்தது தெரியவந்தது.

 இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூரில் தங்கி ரேஷன் அட்டை மற்றும் பிற இந்திய ஆவணங்களை பெற்றிருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சமீபத்தில் அவர்கள் இலங்கை செல்ல முடிவு செய்து பெரம்பலூர் முகவரியில் போலி கடவுச்சீட்டைப் பெற்றுள்ளனர்.

குறித்த  தம்பதியினரை  விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய குடிவரவுத் துறை அதிகாரிகள் விசாரணை செய்ததுடன், பின்னர் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற தம்பதியினர் கைது. போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற தம்பதியினர்  விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வியாழன் இரவு கொழும்பு வரவிருந்த விமானத்தில் ஏறவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை குடிவரவு அதிகாரிகள் சோதனை செய்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.பெரம்பலூரை சேர்ந்த ராமச்சந்திரன் அவரது மனைவி ஹனிஷா ஆகியோரின் கடவுச்சீட்டை சோதனை செய்தபோது, இருவரும் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பயணம் செய்தது தெரியவந்தது. இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூரில் தங்கி ரேஷன் அட்டை மற்றும் பிற இந்திய ஆவணங்களை பெற்றிருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.சமீபத்தில் அவர்கள் இலங்கை செல்ல முடிவு செய்து பெரம்பலூர் முகவரியில் போலி கடவுச்சீட்டைப் பெற்றுள்ளனர்.குறித்த  தம்பதியினரை  விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய குடிவரவுத் துறை அதிகாரிகள் விசாரணை செய்ததுடன், பின்னர் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement