• Nov 22 2024

ஆபத்தில் சிக்கிய பருத்தித்துறை கடற்றொழிலாளர்களை காப்பாற்றிய இந்திய கடற்படை!

Chithra / Aug 23rd 2024, 12:14 pm
image

 

ஆபத்தில் சிக்கியிருந்த இலங்கை கடற்றொழில் படகில் இருந்து நான்கு கடற்றொழிலாளர்களை இந்திய கடற்படை அதிகாரிகள் மீட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கையின் கிழக்கு கடற்கரையில் பருத்தித்துறையில் இருந்து சுமார் 447 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த உள்ளூர் கடற்றொழில் இழுவை படகு, 2024 ஜூலை 07ஆம் அன்று பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 04 கடற்றொழிலாளர்களுடன் தொழிலுக்காக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வடக்கின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஆர்சிசி என்ற இரண்டு நாடுகளினதும் கடல் மீட்பு ஒத்துழைப்பு மையத்தை தொடர்புகொண்டு, குறித்த இழுவை படகு ஆபத்தில் உள்ளதை அறிவித்தது.

இதனையடுத்து இலங்கையின் கடற்படை, சென்னையின் உதவியை நாடியது.

இந்தநிலையில் சென்னையில் இயங்கும் கடல் மீட்பு ஒத்துழைப்பு மையம், கடற்றொழிலாளர்களை மீட்டு இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்துள்ளது. 

ஆபத்தில் சிக்கிய பருத்தித்துறை கடற்றொழிலாளர்களை காப்பாற்றிய இந்திய கடற்படை  ஆபத்தில் சிக்கியிருந்த இலங்கை கடற்றொழில் படகில் இருந்து நான்கு கடற்றொழிலாளர்களை இந்திய கடற்படை அதிகாரிகள் மீட்டுள்ளதாக தெரியவருகின்றது.இலங்கையின் கிழக்கு கடற்கரையில் பருத்தித்துறையில் இருந்து சுமார் 447 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.இந்த உள்ளூர் கடற்றொழில் இழுவை படகு, 2024 ஜூலை 07ஆம் அன்று பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 04 கடற்றொழிலாளர்களுடன் தொழிலுக்காக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, வடக்கின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஆர்சிசி என்ற இரண்டு நாடுகளினதும் கடல் மீட்பு ஒத்துழைப்பு மையத்தை தொடர்புகொண்டு, குறித்த இழுவை படகு ஆபத்தில் உள்ளதை அறிவித்தது.இதனையடுத்து இலங்கையின் கடற்படை, சென்னையின் உதவியை நாடியது.இந்தநிலையில் சென்னையில் இயங்கும் கடல் மீட்பு ஒத்துழைப்பு மையம், கடற்றொழிலாளர்களை மீட்டு இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement