முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் இன்றையதினம் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திசர இரோஷன நாணயக்கார, கடந்த டிசம்பர் 28ஆம் திகதி மோசடி தொடர்பான முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பணமோசடி செய்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் மனுஷவின் சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் இன்றையதினம் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திசர இரோஷன நாணயக்கார, கடந்த டிசம்பர் 28ஆம் திகதி மோசடி தொடர்பான முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பணமோசடி செய்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.