• Dec 01 2024

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Tamil nila / Oct 23rd 2024, 7:42 pm
image

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் இன்று (23) காலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுருந்தார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தயார் என நேற்று (22) முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.


இதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​குற்றம் சாட்டப்பட்ட ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதன்படி, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் இன்று (23) காலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுருந்தார்.இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தயார் என நேற்று (22) முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.இதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்திருந்தது.இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​குற்றம் சாட்டப்பட்ட ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதன்படி, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement