• Mar 04 2025

போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு! களத்தில் பொலிஸார்

Chithra / Mar 4th 2025, 12:50 pm
image


ஆசிரியர் தகுதிப் பரீட்சையில் சித்தியடைந்து மற்றும் இன்னும் வேலைவாய்ப்பு கிடைக்காத வேலையற்ற பட்டாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டார்களினால் இன்று (04) நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

பொல்துவ சந்திப்பில் இந்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வீதிகளை மறித்து பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்ற புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்த நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளார். 

இந்நிலையில், உத்தரவை மீறி செயற்பட்டால் போராட்டத்தை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்றும், அமைதியைப் பேண இலங்கை பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு களத்தில் பொலிஸார் ஆசிரியர் தகுதிப் பரீட்சையில் சித்தியடைந்து மற்றும் இன்னும் வேலைவாய்ப்பு கிடைக்காத வேலையற்ற பட்டாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டார்களினால் இன்று (04) நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொல்துவ சந்திப்பில் இந்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வீதிகளை மறித்து பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்ற புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்த நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளார். இந்நிலையில், உத்தரவை மீறி செயற்பட்டால் போராட்டத்தை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்றும், அமைதியைப் பேண இலங்கை பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement