• Nov 25 2024

மருந்தகத்தில் மரணச்சடங்கு நடாத்தியது சுகாதாரசீர்கேடு- பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகத்தின் செயற்பாடுகளை நிறுத்த நீதிமன்று கட்டளை!

Tamil nila / Aug 8th 2024, 11:22 pm
image

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில்  மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில், சமுதாயத்தின் பொது சுகாதாரத்துக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறு  ஏற்பட்டிருப்பதாக மன்று கருதி அங்குள்ள பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதால்  அகற்றும் வரை மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்துமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகத்தில்  அண்மையில், மரணச் சடங்கு இடம்பெற்றதாகத் தெரிவித்து, பொதுமகனால்ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நேற்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாட்டில், இறந்தவரின்  சடலம் அங்கு இறுதிக் கிரியைகளுக்காக வைக்கப்பட்டு,  அகற்றப்பட்டதென்றும், அத்தகைய சூழ்நிலையில் குறித்த மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களில் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டு, அங்கு கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் இருந்ததென்றும், மருந்தகத்தில் காணப்படுகின்ற மருந்துகள் வெவ்வேறு வெப்புநிலைகளில் காணப்பட வேண்டுமென்றும், குறித்த எதிரி அன்றைய தினமே மருந்துகளை றாக்கைகளிலிருந்து அப்புறப்படுத்தியதுடன், வளிச்சீராக்கியை (AC) இயக்காமல் செய்ததன் மூலமும், அந்த மருந்துகள் பழுதடையக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த மருந்தகம் மீளவும் தற்பொழுது இயங்கி வருகின்றதென்றும், அங்கு மருந்துகள் மேலும் விற்பனையாவதற்குச் சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என்றும், அதன் காரணமாகப் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடும் ஆபத்தும் காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டு, 

குறித்த மருந்துக்களையும் உணவுப் பொருட்களையும் விற்பனை செய்வதானது, உடனடியாகத் தடுக்கப்படாதுவிட்டால், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு அல்லது ஊறு ஒன்று ஏற்படுமென்றும், பொதுமக்களின் உடல் நல வசதி மற்றும் பாதுகாப்பு வசதிக்குப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் இருக்கின்றதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டை ஆராய்ந்த மன்று, 

இவ்வழக்கின் எதிரியின் மருந்தகத்தில் மரணச் சடங்கு ஒன்று இடம்பெற்றிருப்பதாலும், அக்காலப் பகுதியில் எதிரியினுடைய மருந்தகத்தில் வளிச்சீராக்கி (AC) நிறுத்தி வைக்கப்பட்டதாக மன்றிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாலும்,

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் வழிகாட்டுதல்களின் கீழ் பேணப்பட வேண்டிய குறைந்த பட்ச வெப்பநிலை உரிய முறையில் பேணப்படவில்லை என்பது மன்றிற்கு முகத்தோற்றளவில் காண்பிக்கப்பட்டிருப்பதாலும், அந்தக் காலப் பகுதியில் மருந்தகத்தில் காணப்பட்ட மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம், கட்டளையை.

சமுதாயத்தின் சுகாதாரத்திக்கும் உடல் நல ஆரோக்கியத்திக்கும் ஊறு ஏற்பட்டு, தொல்லை ஒன்று ஏற்பட்டிருப்பதாக மன்று காண்பதனாலும் பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதால், அவற்றை அகற்றியே வியாபாரத்தை நடத்த வேண்டுமென மன்று காண்பதால், குறிந்த பொருட்களை மறு தவணைக்குள் அகற்ற வேண்டுமென்று,  கட்டளையை ஆக்கி, குறித்த மருந்தகமானது இத்தகைய பொருட்களுடன் தொடர்ந்து இயங்குவதனால், 

அது பொதுச் சுகாதாரத்திற்கும் உடல்நலத்திற்கும் தீங்கு ஏற்படுத்துவதால், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் பிரிவு 104இன் கீழ், குறித்த மருந்தகத்தின் செயற்பாடுகளை நிறுத்திக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருந்தகத்தில் மரணச்சடங்கு நடாத்தியது சுகாதாரசீர்கேடு- பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகத்தின் செயற்பாடுகளை நிறுத்த நீதிமன்று கட்டளை யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில்  மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில், சமுதாயத்தின் பொது சுகாதாரத்துக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறு  ஏற்பட்டிருப்பதாக மன்று கருதி அங்குள்ள பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதால்  அகற்றும் வரை மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்துமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகத்தில்  அண்மையில், மரணச் சடங்கு இடம்பெற்றதாகத் தெரிவித்து, பொதுமகனால்ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நேற்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில், இறந்தவரின்  சடலம் அங்கு இறுதிக் கிரியைகளுக்காக வைக்கப்பட்டு,  அகற்றப்பட்டதென்றும், அத்தகைய சூழ்நிலையில் குறித்த மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களில் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டு, அங்கு கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் இருந்ததென்றும், மருந்தகத்தில் காணப்படுகின்ற மருந்துகள் வெவ்வேறு வெப்புநிலைகளில் காணப்பட வேண்டுமென்றும், குறித்த எதிரி அன்றைய தினமே மருந்துகளை றாக்கைகளிலிருந்து அப்புறப்படுத்தியதுடன், வளிச்சீராக்கியை (AC) இயக்காமல் செய்ததன் மூலமும், அந்த மருந்துகள் பழுதடையக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தகம் மீளவும் தற்பொழுது இயங்கி வருகின்றதென்றும், அங்கு மருந்துகள் மேலும் விற்பனையாவதற்குச் சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என்றும், அதன் காரணமாகப் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடும் ஆபத்தும் காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டு, குறித்த மருந்துக்களையும் உணவுப் பொருட்களையும் விற்பனை செய்வதானது, உடனடியாகத் தடுக்கப்படாதுவிட்டால், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு அல்லது ஊறு ஒன்று ஏற்படுமென்றும், பொதுமக்களின் உடல் நல வசதி மற்றும் பாதுகாப்பு வசதிக்குப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் இருக்கின்றதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைப்பாட்டை ஆராய்ந்த மன்று, இவ்வழக்கின் எதிரியின் மருந்தகத்தில் மரணச் சடங்கு ஒன்று இடம்பெற்றிருப்பதாலும், அக்காலப் பகுதியில் எதிரியினுடைய மருந்தகத்தில் வளிச்சீராக்கி (AC) நிறுத்தி வைக்கப்பட்டதாக மன்றிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாலும்,தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் வழிகாட்டுதல்களின் கீழ் பேணப்பட வேண்டிய குறைந்த பட்ச வெப்பநிலை உரிய முறையில் பேணப்படவில்லை என்பது மன்றிற்கு முகத்தோற்றளவில் காண்பிக்கப்பட்டிருப்பதாலும், அந்தக் காலப் பகுதியில் மருந்தகத்தில் காணப்பட்ட மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம், கட்டளையை.சமுதாயத்தின் சுகாதாரத்திக்கும் உடல் நல ஆரோக்கியத்திக்கும் ஊறு ஏற்பட்டு, தொல்லை ஒன்று ஏற்பட்டிருப்பதாக மன்று காண்பதனாலும் பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதால், அவற்றை அகற்றியே வியாபாரத்தை நடத்த வேண்டுமென மன்று காண்பதால், குறிந்த பொருட்களை மறு தவணைக்குள் அகற்ற வேண்டுமென்று,  கட்டளையை ஆக்கி, குறித்த மருந்தகமானது இத்தகைய பொருட்களுடன் தொடர்ந்து இயங்குவதனால், அது பொதுச் சுகாதாரத்திற்கும் உடல்நலத்திற்கும் தீங்கு ஏற்படுத்துவதால், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் பிரிவு 104இன் கீழ், குறித்த மருந்தகத்தின் செயற்பாடுகளை நிறுத்திக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement