• Apr 28 2024

கொரோனா பாதிப்பு - 2 ஆண்டுகளுக்கு பிறகு காபி வாசனையை உணர்ந்த பெண்! samugammedia

Chithra / Apr 8th 2023, 2:37 pm
image

Advertisement

பொதுவாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு வாரங்களில் தொற்று குணமாகி விடும். ஆனால் சிலருக்கு நீண்ட கால கோவிட் பாதிப்பு ஏற்படும். 

இவ்வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நரம்பு பிரச்சினைகள், பார்வை கோளாறு மற்றும் சுவை நுகர்வு தன்மை போன்றவை பாதிக்கப்படும்.

அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த 54 வயதான ஜெனிபர் ஹென்டர்சன் என்ற பெண்மணி கடந்த ஜனவரி 2021-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தலைவலி, உடல் சோர்வு போன்ற தொற்று அறிகுறிகள் ஒரு வாரத்திலேயே சரியானது. 

ஆனால் சுவை உணர்வு பாதிக்கப்பட்டது. அவரால் பூக்கள் வாசனை, பெரும்பாலான உணவுகளின் சுவையை உணர முடியவில்லை. இதனால் அவருக்கு பிடித்தமான உணவு வகைகள் கூட வெறுப்பாக மாறியது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த டிசம்பரில் ஸ்டெலேட் கேங்க்லியன் பிளாக் (எஸ்ஜிபி) எனப்படும் சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்தார். இம்முறையில் அவரது கழுத்தின் இருபுறமும் நரம்புகளில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பயனாக அவரது வாசனை உணர்வு பிரச்சினை படிப்படியாக சரியானது. இதனால் சுமார் 2 வருங்டங்களுக்கு பிறகு அவரால் சாதாரணமாக காபி வாசனையை உணர முடிந்துள்ளது. 

ஜெனிபர் காபி வாசனையை மீண்டும் உணர்ந்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் டிக்-டாக் வலைத்தளத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு - 2 ஆண்டுகளுக்கு பிறகு காபி வாசனையை உணர்ந்த பெண் samugammedia பொதுவாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு வாரங்களில் தொற்று குணமாகி விடும். ஆனால் சிலருக்கு நீண்ட கால கோவிட் பாதிப்பு ஏற்படும். இவ்வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நரம்பு பிரச்சினைகள், பார்வை கோளாறு மற்றும் சுவை நுகர்வு தன்மை போன்றவை பாதிக்கப்படும்.அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த 54 வயதான ஜெனிபர் ஹென்டர்சன் என்ற பெண்மணி கடந்த ஜனவரி 2021-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தலைவலி, உடல் சோர்வு போன்ற தொற்று அறிகுறிகள் ஒரு வாரத்திலேயே சரியானது. ஆனால் சுவை உணர்வு பாதிக்கப்பட்டது. அவரால் பூக்கள் வாசனை, பெரும்பாலான உணவுகளின் சுவையை உணர முடியவில்லை. இதனால் அவருக்கு பிடித்தமான உணவு வகைகள் கூட வெறுப்பாக மாறியது.கடந்த 2 ஆண்டுகளாக இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த டிசம்பரில் ஸ்டெலேட் கேங்க்லியன் பிளாக் (எஸ்ஜிபி) எனப்படும் சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்தார். இம்முறையில் அவரது கழுத்தின் இருபுறமும் நரம்புகளில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதன் பயனாக அவரது வாசனை உணர்வு பிரச்சினை படிப்படியாக சரியானது. இதனால் சுமார் 2 வருங்டங்களுக்கு பிறகு அவரால் சாதாரணமாக காபி வாசனையை உணர முடிந்துள்ளது. ஜெனிபர் காபி வாசனையை மீண்டும் உணர்ந்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் டிக்-டாக் வலைத்தளத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement