• Apr 28 2024

உணவுக்காக குவிந்த மக்கள் கூட்டம்..!நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு!samugammedia

Sharmi / Apr 1st 2023, 10:41 pm
image

Advertisement

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அங்கு விலைவாசி என்பது விண்ணைத் தொடும் அளவுக்கு உச்சத்தில் இருந்து வருகின்றது.

பாகிஸ்தானின் பொருளாதார சீர்குலைவுக்கு கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக கூறப்படுகிறது. விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் நடக்கவில்லை என்று கூறுகின்றனர். உணவுப்பொருள் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாத அரசு நிர்வாகம், மக்களை இன்று உணவுக்காகத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

கோதுமை விளைச்சலை ஊக்குவிக்க, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, வேளாண் தொழிலை மீட்டெடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உணவுப் பொருள் இறக்குமதியில் அதிக அக்கறை காட்டுகிறது. தற்போது பாகிஸ்தானின் அந்நிய செலாவணிக் கையிருப்பு மிகவும் குறைந்துள்ளது. என்றும் கூறப்படுகிறது.

தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப் படுவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கோதுமை மாவு வழங்கப்படுகிறது.

அண்மையில் பெஷாவர் நகரில் இலவச கோதுமை மாவை அதிகாரிகள் விநியோகம் செய்ய லாரியில் எடுத்துச் சென்றனர். அந்த இலவச கோதுமையைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்தனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது.


இந்த நிலையில் கராச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இலவச கோதுமை பொதுமக்களுக்கு வழங்கியது. இதனை வாங்க பொதுமக்கள் முண்டியடித்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் குழந்தைகள் உட்பட பலர் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர்.

இதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் மூச்சு திணறி இறந்தனர் என்று செய்தி வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உணவு வாங்க சென்று இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.



உணவுக்காக குவிந்த மக்கள் கூட்டம்.நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்புsamugammedia பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அங்கு விலைவாசி என்பது விண்ணைத் தொடும் அளவுக்கு உச்சத்தில் இருந்து வருகின்றது. பாகிஸ்தானின் பொருளாதார சீர்குலைவுக்கு கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக கூறப்படுகிறது. விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் நடக்கவில்லை என்று கூறுகின்றனர். உணவுப்பொருள் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாத அரசு நிர்வாகம், மக்களை இன்று உணவுக்காகத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. கோதுமை விளைச்சலை ஊக்குவிக்க, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, வேளாண் தொழிலை மீட்டெடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உணவுப் பொருள் இறக்குமதியில் அதிக அக்கறை காட்டுகிறது. தற்போது பாகிஸ்தானின் அந்நிய செலாவணிக் கையிருப்பு மிகவும் குறைந்துள்ளது. என்றும் கூறப்படுகிறது.தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப் படுவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கோதுமை மாவு வழங்கப்படுகிறது. அண்மையில் பெஷாவர் நகரில் இலவச கோதுமை மாவை அதிகாரிகள் விநியோகம் செய்ய லாரியில் எடுத்துச் சென்றனர். அந்த இலவச கோதுமையைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்தனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கராச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இலவச கோதுமை பொதுமக்களுக்கு வழங்கியது. இதனை வாங்க பொதுமக்கள் முண்டியடித்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் குழந்தைகள் உட்பட பலர் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். இதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் மூச்சு திணறி இறந்தனர் என்று செய்தி வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உணவு வாங்க சென்று இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement