• Sep 23 2024

இலங்கையில் ஊரடங்கு சட்டம் இன்று நண்பகல் 12 மணிவரை நீடிப்பு!

Tamil nila / Sep 22nd 2024, 6:34 am
image

Advertisement

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று பகல் 12 மணிவரை  நீடிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனை  தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பயணிப்பதற்கு பொலிஸ் நிலையங்களினால் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கும் போது உங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஊரடங்கு சட்டம் இன்று நண்பகல் 12 மணிவரை நீடிப்பு நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று பகல் 12 மணிவரை  நீடிக்கப்பட்டுள்ளது.பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனை  தெரிவித்துள்ளார்.இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பயணிப்பதற்கு பொலிஸ் நிலையங்களினால் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கும் போது உங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement