• Nov 25 2024

நிகழ்நிலை சட்டம் பயங்கரவாத தடை சட்டத்தை விட கொடூரமானது - ஜோசப் ஸ்ராலின் தெரிவிப்பு..!samugammedia

Tharun / Jan 27th 2024, 6:07 pm
image

அன்று தற்காலிகமாக உருவாக்கப்பட்ட நிகழ் நிலைச்சட்டம் எவ்வாறு 44 வருடகாலமாக மக்களை துன்புறுத்துகிறதோ அது போலவே நிகழ் நிலை சட்டமும் மக்களை துன்புறுத்தும் என  இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவர்  ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். 

நேற்று  இடம்பெற்றுள்ள யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றுள்ள நிகழ் நிலைச்சட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

பயங்கரவாத தடைச்சட்டம் 1978 ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டு வரப்பட்டது. இந்த பயங்கரவாதத்தடை சட்டம் 45 இருந்தது.  

தற்போது நிகழ் நிலைச்சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டு கொன்டு வரப்பட்ட  இந்த சட்டத்தை தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்கள். 

இந்த சூழ்நிலையில் இது  எப்படி  முறியடிப்பது. 2009ஆ ம் ஆண்டிலிருந்து இலங்கையில் பயங்கரவாதம் இல்லாமல் ஆக்கிவிட்டோம் என்று சொன்னவர்கள் இப்போ  பயங்கரவாதம் என்று புதிதாக அடையாளப்படுத்தி செயல்பாடுகளை பயங்கரவாதமாக மாத்தியிருக்கிறார்கள். 

இது மட்டுமல்ல இப்போது  கொண்டு வர போகும்  தொழிலாளர்கள் சம்பந்தமாக புதிய சட்டமொன்று கொண்டு வரப்போகிறார்கள். தற்போது தொழிலாளர்கள் சம்பந்தமாக 1935 ஆம் ஆண்டுதான் ஒரு சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில் உள்ள தொழிலாளர் உரிமையைக்கூட இல்லாமல் ஆக போகிறார்கள்.  

ஆகவே நாங்கள்  இன்னும் பேசாமல் இருக்காமல் இதற்கு எதிராக செயல்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை சட்டம் பயங்கரவாத தடை சட்டத்தை விட கொடூரமானது - ஜோசப் ஸ்ராலின் தெரிவிப்பு.samugammedia அன்று தற்காலிகமாக உருவாக்கப்பட்ட நிகழ் நிலைச்சட்டம் எவ்வாறு 44 வருடகாலமாக மக்களை துன்புறுத்துகிறதோ அது போலவே நிகழ் நிலை சட்டமும் மக்களை துன்புறுத்தும் என  இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவர்  ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். நேற்று  இடம்பெற்றுள்ள யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றுள்ள நிகழ் நிலைச்சட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டம் 1978 ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டு வரப்பட்டது. இந்த பயங்கரவாதத்தடை சட்டம் 45 இருந்தது.  தற்போது நிகழ் நிலைச்சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டு கொன்டு வரப்பட்ட  இந்த சட்டத்தை தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இது  எப்படி  முறியடிப்பது. 2009ஆ ம் ஆண்டிலிருந்து இலங்கையில் பயங்கரவாதம் இல்லாமல் ஆக்கிவிட்டோம் என்று சொன்னவர்கள் இப்போ  பயங்கரவாதம் என்று புதிதாக அடையாளப்படுத்தி செயல்பாடுகளை பயங்கரவாதமாக மாத்தியிருக்கிறார்கள். இது மட்டுமல்ல இப்போது  கொண்டு வர போகும்  தொழிலாளர்கள் சம்பந்தமாக புதிய சட்டமொன்று கொண்டு வரப்போகிறார்கள். தற்போது தொழிலாளர்கள் சம்பந்தமாக 1935 ஆம் ஆண்டுதான் ஒரு சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில் உள்ள தொழிலாளர் உரிமையைக்கூட இல்லாமல் ஆக போகிறார்கள்.  ஆகவே நாங்கள்  இன்னும் பேசாமல் இருக்காமல் இதற்கு எதிராக செயல்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement