மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்து வரும் சூழலில் சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டிடம் மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிறன்று காலை புயலாக வலுப்பெற்றது.
மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னைக்கு அருகே சுமார் 110 கிமீ தொலைவில் இருக்கிறது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இன்று முற்பகலுக்குள் மிக்ஜாம் புயல் தீவிரப்புயலாக வலுப்பெறும் என்றும், இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே 40 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதுடன், பெட்ரோல் நிலை மேற்கூரை சரிந்து விழுந்தது.
இதில் சிக்கிய 5 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர், இதற்கிடையே வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டிடம் மண்ணுக்குள் இறங்கியது.
இதில் 10 பேர் சிக்கியிருப்பதாகவும், 2 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்டி காவல்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மிக்ஜாம் புயல்: மண்ணுக்குள் புதைந்த அடுக்குமாடி கட்டிடம் samugammedia மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்து வரும் சூழலில் சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டிடம் மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிறன்று காலை புயலாக வலுப்பெற்றது.மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னைக்கு அருகே சுமார் 110 கிமீ தொலைவில் இருக்கிறது.இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.இன்று முற்பகலுக்குள் மிக்ஜாம் புயல் தீவிரப்புயலாக வலுப்பெறும் என்றும், இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே 40 அடிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதுடன், பெட்ரோல் நிலை மேற்கூரை சரிந்து விழுந்தது.இதில் சிக்கிய 5 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர், இதற்கிடையே வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டிடம் மண்ணுக்குள் இறங்கியது.இதில் 10 பேர் சிக்கியிருப்பதாகவும், 2 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கிண்டி காவல்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.