• Dec 03 2024

இந்தியாவைப் புரட்டிப் போட்டமிக்ஜம் புயல்: 19 பேர் பலி!

Chithra / Dec 6th 2023, 10:42 am
image

 

இந்தியாவைப் புரட்டிப் போட்ட மிக்ஜம் புயலில் சிக்கி இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை நேற்று (05) மாத்திரம் குறித்த புயலில் சிக்குண்டு 12 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த மிக்ஜம் புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்துள்ளதுடன் இதன் வேகம் படிப்படியாக வலுவிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புயலின் தாக்கம்  காரணமாக, தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் சென்னையின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவைப் புரட்டிப் போட்டமிக்ஜம் புயல்: 19 பேர் பலி  இந்தியாவைப் புரட்டிப் போட்ட மிக்ஜம் புயலில் சிக்கி இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதேவேளை நேற்று (05) மாத்திரம் குறித்த புயலில் சிக்குண்டு 12 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த மிக்ஜம் புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்துள்ளதுடன் இதன் வேகம் படிப்படியாக வலுவிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த புயலின் தாக்கம்  காரணமாக, தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.மேலும் சென்னையின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement