16 வருடங்களுக்குப் பிறகு நாட்டின் பௌத்த மக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு நாள் தலதா மாளிகையை வழிபட வேண்டும் என்பது இந்த நாட்டின் பௌத்த மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்தார்.
கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் இழந்து வரும் நாகரிகத்தை மீட்டெடுக்கவும், மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்கவும் இந்த வாய்ப்பு உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்க இந்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புத்தாண்டின் நீட்சியாக நடைபெறும் தலதா கண்காட்சி நாட்டை புதிய திசையில் இட்டுச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பொதுமக்களுக்காக நடத்தப்படும் தலதா மாளிகையின் சிறப்பு காட்சிப்படுத்தல் ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஶ்ரீ தலதா பார்வை என்ற பெயரில் தலதா மாளிகை வளாகத்துக்குள் 10 நாட்களுக்கு இந்த காட்சிப்படுத்தல் இடம்பெறும்.
தொடக்க நாளன்று தலதா கண்காட்சி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 5.00 மணிக்கு நிறைவு பெறும்.
அதன் பிறகு, ஏனைய நாட்களில் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத, கலாசார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு தலதா உற்சவம் ஒரு வாய்ப்பு - ஜனாதிபதி கருத்து 16 வருடங்களுக்குப் பிறகு நாட்டின் பௌத்த மக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு நாள் தலதா மாளிகையை வழிபட வேண்டும் என்பது இந்த நாட்டின் பௌத்த மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்தார்.கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்தார்.நாட்டில் இழந்து வரும் நாகரிகத்தை மீட்டெடுக்கவும், மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்கவும் இந்த வாய்ப்பு உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்க இந்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புத்தாண்டின் நீட்சியாக நடைபெறும் தலதா கண்காட்சி நாட்டை புதிய திசையில் இட்டுச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.பொதுமக்களுக்காக நடத்தப்படும் தலதா மாளிகையின் சிறப்பு காட்சிப்படுத்தல் ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஶ்ரீ தலதா பார்வை என்ற பெயரில் தலதா மாளிகை வளாகத்துக்குள் 10 நாட்களுக்கு இந்த காட்சிப்படுத்தல் இடம்பெறும். தொடக்க நாளன்று தலதா கண்காட்சி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 5.00 மணிக்கு நிறைவு பெறும். அதன் பிறகு, ஏனைய நாட்களில் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.