• May 10 2025

நீங்கள் அதானியை கைவிடவில்லை; அதானியே உங்களை கைவிட்டார்! - அநுர அரசை குற்றம்சாட்டிய மனோ எம்.பி

Chithra / Mar 3rd 2025, 7:56 am
image

 

இந்தியத் தொழிலதிபரான அதானியை நீங்கள் கைவிடவில்லை, உண்மை என்னவென்றால் அதானியே உங்களை கைவிட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அதானியின் இலங்கை திட்டமானது, உள்ளூர் மின்கட்டமைப்பிற்கான மின்சாரத்தை உருவாக்குவது மட்டுமல்ல, இந்தியாவுக்கும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதும் ஆகும்.

இந்தநிலையில், அரசாங்கம் நிலைமையை சரியாகக் கையாளத் தவறியுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களுக்கு எதிர்மறையான சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை அரசாங்கம் தவறாகப் புரிந்துகொண்டது. 

இலங்கை - இந்திய மின் சுற்று மூலம், இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை மின்சாரம், இலங்கைக்கு கொண்டு வரும் வருமானம் மூலம் இலங்கையில் மின்சார கட்டணங்களை குறைக்க முடியும். 

அதானியின், யூனிட் விலை தொடர்பில் பிரச்சினை இருக்கும் போது, அதை பேசி தீர்த்து இருக்கலாம். எனத் தெரிவித்துள்ளார்.


நீங்கள் அதானியை கைவிடவில்லை; அதானியே உங்களை கைவிட்டார் - அநுர அரசை குற்றம்சாட்டிய மனோ எம்.பி  இந்தியத் தொழிலதிபரான அதானியை நீங்கள் கைவிடவில்லை, உண்மை என்னவென்றால் அதானியே உங்களை கைவிட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,அதானியின் இலங்கை திட்டமானது, உள்ளூர் மின்கட்டமைப்பிற்கான மின்சாரத்தை உருவாக்குவது மட்டுமல்ல, இந்தியாவுக்கும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதும் ஆகும்.இந்தநிலையில், அரசாங்கம் நிலைமையை சரியாகக் கையாளத் தவறியுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களுக்கு எதிர்மறையான சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது.இந்த திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை அரசாங்கம் தவறாகப் புரிந்துகொண்டது. இலங்கை - இந்திய மின் சுற்று மூலம், இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை மின்சாரம், இலங்கைக்கு கொண்டு வரும் வருமானம் மூலம் இலங்கையில் மின்சார கட்டணங்களை குறைக்க முடியும். அதானியின், யூனிட் விலை தொடர்பில் பிரச்சினை இருக்கும் போது, அதை பேசி தீர்த்து இருக்கலாம். எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now