கொழும்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்பு மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபருடன், கஞ்சா கலந்த 25 போதைப்பொருள், 202 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 20,500.00 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படை தலைமையக முகாமில் நிறுவப்பட்ட விசேட பிரிவு (கொழும்பு வலயம்) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15, அளுத் மாவத்தை வீதியில் வசிக்கும் 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இவ்வாறான விற்பனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia கொழும்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்பு மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.சந்தேகநபருடன், கஞ்சா கலந்த 25 போதைப்பொருள், 202 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 20,500.00 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.விசேட அதிரடிப்படை தலைமையக முகாமில் நிறுவப்பட்ட விசேட பிரிவு (கொழும்பு வலயம்) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15, அளுத் மாவத்தை வீதியில் வசிக்கும் 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இவ்வாறான விற்பனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.