• Dec 14 2024

வெள்ள நீரில் இறந்த நிலையில் முதலைகள் : மக்கள் மத்தியில் அச்சம்

Tharmini / Nov 25th 2024, 2:55 pm
image

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ள நீரில் இறந்த நிலையில் முதலைகள் கரை ஒதுங்கியுள்ளன.

குறித்த  முதலைகள்  இன்று  இறந்து கரையொதுங்கியமை பொதுமக்கள் மத்தியில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் முதலைகள் பல அண்மைக்காலமாக காணப்பட்டன.

மேலும் இப்பாலத்தை அண்டிய பகுதிகளில் சுமார் 30ற்கும் அதிகமான முதலைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 10 முதல் 15 வரையிலான முதலைகளே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 7 அடி முதல் 8 மற்றும் 9 அடி முதலைகள் தற்போது இறந்த நிலையில் நீரில் மிதந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அங்கு பெய்து வரும் அடைமழை காரணமாக பல முதலைகள் இறந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியினால் பொதுமக்கள் சிரமத்துடன் பயணம் செய்வதாக பிரதேச செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.





வெள்ள நீரில் இறந்த நிலையில் முதலைகள் : மக்கள் மத்தியில் அச்சம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ள நீரில் இறந்த நிலையில் முதலைகள் கரை ஒதுங்கியுள்ளன.குறித்த  முதலைகள்  இன்று  இறந்து கரையொதுங்கியமை பொதுமக்கள் மத்தியில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் முதலைகள் பல அண்மைக்காலமாக காணப்பட்டன.மேலும் இப்பாலத்தை அண்டிய பகுதிகளில் சுமார் 30ற்கும் அதிகமான முதலைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 10 முதல் 15 வரையிலான முதலைகளே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.சுமார் 7 அடி முதல் 8 மற்றும் 9 அடி முதலைகள் தற்போது இறந்த நிலையில் நீரில் மிதந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போது அங்கு பெய்து வரும் அடைமழை காரணமாக பல முதலைகள் இறந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் இப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியினால் பொதுமக்கள் சிரமத்துடன் பயணம் செய்வதாக பிரதேச செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement