• Feb 01 2025

வடமராட்சி கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

Chithra / Feb 1st 2025, 7:21 am
image

 வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.

இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


வடமராட்சி கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்  வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement