• Dec 23 2024

அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிப்பு!

Chithra / Dec 20th 2024, 8:21 am
image

 

அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. 

அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்தது. 

இந்தநிலையில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுவது நியாயமற்றது எனவும் சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டுமாயின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். 


அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலும், சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.

அரிசி உற்பத்தியாளர்களே அரிசியின் விலையை இன்றும் தீர்மானிக்கிறார்கள். இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறார்கள்.

இந்திய விலைக்கு அமைய ஒரு கிலோகிராம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு இலங்கை நாணய அலகில் 150 ரூபாவை செலவிடுகிறார்கள். அத்துடன் இறக்குமதி செய்யப்படும் ஒருகிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகிறது.

வரி உள்ளடங்களாக ஒரு கிலோகிராம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தகர்கள் 215 ரூபாவை செலவிட நேரிடும். இவ்வாறான நிலையில் அவர்களால் எவ்வாறு 220 ரூபாவுக்கு அரிசியை விற்பனை செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிப்பு  அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்தது. இந்தநிலையில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதேவேளை இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுவது நியாயமற்றது எனவும் சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டுமாயின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலும், சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.அரிசி உற்பத்தியாளர்களே அரிசியின் விலையை இன்றும் தீர்மானிக்கிறார்கள். இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறார்கள்.இந்திய விலைக்கு அமைய ஒரு கிலோகிராம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு இலங்கை நாணய அலகில் 150 ரூபாவை செலவிடுகிறார்கள். அத்துடன் இறக்குமதி செய்யப்படும் ஒருகிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகிறது.வரி உள்ளடங்களாக ஒரு கிலோகிராம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தகர்கள் 215 ரூபாவை செலவிட நேரிடும். இவ்வாறான நிலையில் அவர்களால் எவ்வாறு 220 ரூபாவுக்கு அரிசியை விற்பனை செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement