• Mar 09 2025

சிரியாவின் கடலோர பகுதிகளில் மோதல் தொடர்ந்து நீடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 237 ஆக உயர்வு

Chithra / Mar 8th 2025, 4:09 pm
image


சிரியாவின் கடலோரப் பகுதிகளில் தற்போதைய இராணுவ மோதல்கள் வலுப்பெற்று, உயிரிழந்தோர் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது. 

சிரியா மனிதவுரிமை கண்காணிப்பு அமைப்பின் (Syrian Observatory for Human Rights) தகவலின்படி, 

கடந்த வியாழக்கிழமை தொடங்கி  நேற்றுமுதல் பல்வேறு தரப்பினரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

இதில் யார்  உயிரிழந்தார்கள் என பார்க்கையில்

கடந்த சில நாட்களாக நிலவும் கடும் மோதல்களில், அரசுப் படையினரும், எதிர்க்கட்சித் தளபதிகளும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

இதில் 142 பேர் – பொதுமக்கள், 50 பேர் – சிரியாவின் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்திலிருந்து வீரர்கள் மற்றும் அதிகாரிகள், 45 பேர் – எதிர்க்கட்சிப் போர் வீரர்கள்  உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென ஏற்பட்ட இந்த கடும் மோதல்களுக்கு என்ன காரணம் என ஆராய்ந்து பார்க்கையில் 

லத்தாகியா, டார்டூஸ், மற்றும் ஹாமா மாகாணங்களில், அரசுப் படைகள் முன்னாள் அரசாங்க ஆதரவாளர்களின் படைகளை ஒழிக்க தொடங்கியதிலிருந்து மோதல் அதிகரித்துள்ளது.

எதிர்க்கட்சியினர் திடீரென இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் தலைமையகங்களை தாக்கினர்இதன் பின்னர், அரசுப் படைகள் கடுமையான பதிலடி வழங்கி வருகின்றன.

இந்நிலையில் கண்காணிப்பு அமைப்பின் தகவலின் அடிப்படையில் முக்கிய பகுதிகளில் கூடுதல் ராணுவ பலம் மற்றும் கனரக ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 

குறிப்பாக, லத்தாகியா மற்றும் டார்டூஸ் பகுதியின் புறநகரங்களில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை  கடந்த டிசம்பருக்குப் பிறகு இடம்பெறும் கடுமையான மோதலாக இது உள்ளதாகவே கண்காணிப்பு அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது,

கடந்த டிசம்பரில் முன்னாள் அரசு வீழ்ச்சியடைந்ததிலிருந்து இது வரை இடம்பெற்ற மோதல்களில் அதிகம் பேரை பலியெடுத்த மோதலாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் கடலோர பகுதிகளில் மோதல் தொடர்ந்து நீடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 237 ஆக உயர்வு சிரியாவின் கடலோரப் பகுதிகளில் தற்போதைய இராணுவ மோதல்கள் வலுப்பெற்று, உயிரிழந்தோர் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது. சிரியா மனிதவுரிமை கண்காணிப்பு அமைப்பின் (Syrian Observatory for Human Rights) தகவலின்படி, கடந்த வியாழக்கிழமை தொடங்கி  நேற்றுமுதல் பல்வேறு தரப்பினரும் இழப்பை சந்தித்துள்ளனர்.இதில் யார்  உயிரிழந்தார்கள் என பார்க்கையில்கடந்த சில நாட்களாக நிலவும் கடும் மோதல்களில், அரசுப் படையினரும், எதிர்க்கட்சித் தளபதிகளும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.இதில் 142 பேர் – பொதுமக்கள், 50 பேர் – சிரியாவின் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்திலிருந்து வீரர்கள் மற்றும் அதிகாரிகள், 45 பேர் – எதிர்க்கட்சிப் போர் வீரர்கள்  உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் திடீரென ஏற்பட்ட இந்த கடும் மோதல்களுக்கு என்ன காரணம் என ஆராய்ந்து பார்க்கையில் லத்தாகியா, டார்டூஸ், மற்றும் ஹாமா மாகாணங்களில், அரசுப் படைகள் முன்னாள் அரசாங்க ஆதரவாளர்களின் படைகளை ஒழிக்க தொடங்கியதிலிருந்து மோதல் அதிகரித்துள்ளது.எதிர்க்கட்சியினர் திடீரென இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் தலைமையகங்களை தாக்கினர்இதன் பின்னர், அரசுப் படைகள் கடுமையான பதிலடி வழங்கி வருகின்றன.இந்நிலையில் கண்காணிப்பு அமைப்பின் தகவலின் அடிப்படையில் முக்கிய பகுதிகளில் கூடுதல் ராணுவ பலம் மற்றும் கனரக ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, லத்தாகியா மற்றும் டார்டூஸ் பகுதியின் புறநகரங்களில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.இதேவேளை  கடந்த டிசம்பருக்குப் பிறகு இடம்பெறும் கடுமையான மோதலாக இது உள்ளதாகவே கண்காணிப்பு அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது,கடந்த டிசம்பரில் முன்னாள் அரசு வீழ்ச்சியடைந்ததிலிருந்து இது வரை இடம்பெற்ற மோதல்களில் அதிகம் பேரை பலியெடுத்த மோதலாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement