• May 20 2024

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு!

Tamil nila / Dec 10th 2022, 8:28 pm
image

Advertisement

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவத்தின் ‘சேவா அபிநந்தன பிரணாம’  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்  கமல் குணரத்னவின் தலைமையில் நேற்று  (டிசம்பர் 09) பத்தரமுல்லை சுஹுருபாய வளாகத்தில் நடைபெற்றது.

 

ரக்னா பாதுகாப்பு லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பி. சந்திரவன்ச அவர்களின் கருத்திட்டத்திற்கமயை பத்து வருடமாக பணியாற்றிய   சுமார் 117க்கு மேற்பட்ட  உருப்பனர்களுக்கு இதன்போது  'சேவா அபிநந்தன பிரணாம' சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


 

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய ஜெனரல் குணரத்ன, ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்தின் பணியாளர்கள் ஆற்றிவரும் விலைமதிப்பற்ற சேவைகளைப் பாராட்டியதுடன், உங்கள் சேவை கவனிக்கப்படாவிட்டாலும், அது ஒரு சிறந்த தொழில் என்று தெரிவித்தார்.

 

ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம் என்பது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு முன்னணி பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனமாகும் என மேலும் தெரிவித்தார்.

 

இந்த நிறுவனமானது, நில செயல்பாடுகள், கடல்சார் செயல்பாடுகள், வணிக மற்றும் தொழில்துறை பயிற்சி கல்லூரி, கேட்டரிங், சிறப்புத் திறன் சேவை பிரிவு மற்றும் சைபர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு சேவை போன்ற ஆறு வருவாய் ஈட்டும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

 

பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மேலதிக செயலாளர் சமன் திஸாநாயக்க, ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ‘சேவா அபிநந்தன பிரணாம’  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்  கமல் குணரத்னவின் தலைமையில் நேற்று  (டிசம்பர் 09) பத்தரமுல்லை சுஹுருபாய வளாகத்தில் நடைபெற்றது. ரக்னா பாதுகாப்பு லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பி. சந்திரவன்ச அவர்களின் கருத்திட்டத்திற்கமயை பத்து வருடமாக பணியாற்றிய   சுமார் 117க்கு மேற்பட்ட  உருப்பனர்களுக்கு இதன்போது  'சேவா அபிநந்தன பிரணாம' சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது உரையாற்றிய ஜெனரல் குணரத்ன, ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்தின் பணியாளர்கள் ஆற்றிவரும் விலைமதிப்பற்ற சேவைகளைப் பாராட்டியதுடன், உங்கள் சேவை கவனிக்கப்படாவிட்டாலும், அது ஒரு சிறந்த தொழில் என்று தெரிவித்தார். ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம் என்பது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு முன்னணி பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனமாகும் என மேலும் தெரிவித்தார். இந்த நிறுவனமானது, நில செயல்பாடுகள், கடல்சார் செயல்பாடுகள், வணிக மற்றும் தொழில்துறை பயிற்சி கல்லூரி, கேட்டரிங், சிறப்புத் திறன் சேவை பிரிவு மற்றும் சைபர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு சேவை போன்ற ஆறு வருவாய் ஈட்டும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மேலதிக செயலாளர் சமன் திஸாநாயக்க, ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement