• Jan 05 2025

மின்சார சபை ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை!

Chithra / Jan 3rd 2025, 3:42 pm
image

 

பல்வேறு அரச நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் அந்தக் கொடுப்பனவை விரைவில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய ஊழியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய தேசிய ஊழியர் சங்கத்தின் இலங்கை மின்சார சபை கிளை வலுசக்தி அமைச்சர் புண்ய ஸ்ரீ ஜயக்கொடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. 

இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இருப்பினும், இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

அதன் பின்னர் ரஞ்சன் ஜெயலால் தமது கருத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டு ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கினால் அடுத்த ஆண்டு வரவிருக்கும் வறட்சி காலத்தில் மின் விநியோகத் தடையை சந்திக்க நேரிடும் தேசிய நாளிதழ் ஒன்றுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இந்தநிலையில், மின்சார சபை ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென தேசிய ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


மின்சார சபை ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை  பல்வேறு அரச நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் அந்தக் கொடுப்பனவை விரைவில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய ஊழியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.இதற்கமைய தேசிய ஊழியர் சங்கத்தின் இலங்கை மின்சார சபை கிளை வலுசக்தி அமைச்சர் புண்ய ஸ்ரீ ஜயக்கொடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன் பின்னர் ரஞ்சன் ஜெயலால் தமது கருத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டு ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கினால் அடுத்த ஆண்டு வரவிருக்கும் வறட்சி காலத்தில் மின் விநியோகத் தடையை சந்திக்க நேரிடும் தேசிய நாளிதழ் ஒன்றுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில், மின்சார சபை ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென தேசிய ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement