திருகோணமலை வானெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளம் ஒன்றிலிருந்து ஆணின் சடலமொன்று நேற்றையதினம்(2) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வானெல பகுதியைச் சேர்ந்த 40 வயதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடந்த 31ஆம் திகதி மாலை, விருந்தொன்றுக்கு சென்று வருவதாக மோட்டார் சைக்கிளில் சென்றவர் என்று ஆரம்பகட்ட விசாரணையிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விருந்துக்கு சென்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மரணம். திருகோணமலை வானெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளம் ஒன்றிலிருந்து ஆணின் சடலமொன்று நேற்றையதினம்(2) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வானெல பகுதியைச் சேர்ந்த 40 வயதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடந்த 31ஆம் திகதி மாலை, விருந்தொன்றுக்கு சென்று வருவதாக மோட்டார் சைக்கிளில் சென்றவர் என்று ஆரம்பகட்ட விசாரணையிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.