• Jan 05 2025

பறவைகளை சுட்டுக் கொலை செய்த நபர்கள் கைது

Chithra / Jan 3rd 2025, 3:34 pm
image



மட்டக்களப்பு - கடுக்காமுனைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கொக்கட்டிச்சோலை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். 

ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேண்டுகோளின் கீழ் சட்ட நிர்வாக நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒருகட்டமாக கடுக்காமுனைப் பகுதியில் சட்டவிரோதமாக பறவைகளை கொலை செய்த  சந்தேக நபர்கள்  நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். 

காலநிலை மாற்றத்தால் இடம்பெயர்ந்து வரும் வெளிநாட்டு அரியவகை சுற்றுலா பறவைகள் இலங்கையின் பல்வேறு இடங்களில் தமது வாழ்க்கையை கழிப்பது வழக்கம். 

இவ்வாறு இடம்பெயர்ந்து வரும் பறவைகளை கொலை செய்து வியாபாரப்படுத்தும் பல சந்தேகநபர்களை கைது செய்வது நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கொக்கடிச்சோலை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றினுள் தடை செய்யப்பட்ட துப்பாக்கியும், கொலை செய்யப்பட்ட பறவைகளும்  மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர்களை உடனடியாக பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  கொக்கடிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


பறவைகளை சுட்டுக் கொலை செய்த நபர்கள் கைது மட்டக்களப்பு - கடுக்காமுனைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கொக்கட்டிச்சோலை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேண்டுகோளின் கீழ் சட்ட நிர்வாக நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதன் ஒருகட்டமாக கடுக்காமுனைப் பகுதியில் சட்டவிரோதமாக பறவைகளை கொலை செய்த  சந்தேக நபர்கள்  நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். காலநிலை மாற்றத்தால் இடம்பெயர்ந்து வரும் வெளிநாட்டு அரியவகை சுற்றுலா பறவைகள் இலங்கையின் பல்வேறு இடங்களில் தமது வாழ்க்கையை கழிப்பது வழக்கம். இவ்வாறு இடம்பெயர்ந்து வரும் பறவைகளை கொலை செய்து வியாபாரப்படுத்தும் பல சந்தேகநபர்களை கைது செய்வது நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் கொக்கடிச்சோலை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றினுள் தடை செய்யப்பட்ட துப்பாக்கியும், கொலை செய்யப்பட்ட பறவைகளும்  மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர்களை உடனடியாக பொலிசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  கொக்கடிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement