• Nov 23 2024

கட்டுமான பொருட்களின் விலைகளை குறைக்க கோரிக்கை! samugammedia

Tamil nila / Dec 2nd 2023, 7:41 am
image

நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் சங்கங்களின் பிரதிநிதிகள் துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

அதற்கமைய, மௌபிம சுரக்ஷா ஒன்றியம், தேசிய நுகர்வோர் முன்னணி, ஐக்கிய ஒத்துழைப்பு முன்னணி, கறுவா ஏற்றுமதியாளர்கள் சங்கம், கொம்யூனிகேஷன் உரிமையாளர்களின் சங்கம், கட்டுமான சேவையாளர்கள் சங்கம், அகில இலங்கை வாடகை வீட்டாளர்களின் சங்கம் மற்றும் கீழை நாட்டு காணி உரிமையாளர்களின் சங்கம் என்பன இந்தக் குழுக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பதிரன தலைமையில் கூடிய போதே இந்தத் தரப்பினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, இந்த ஒவ்வொரு தரப்பினரும் தமது முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் குழுவில் முன்வைத்தனர். மௌபிம சுரக்ஷா ஒன்றியத்தின் குழுவினர் குறிப்பிடுகையில், இந்நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும், விசேடமாக வீட்டு விவசாயப் பொருளாதாரத்தின் விருத்தி தொடர்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர். தேசிய நுகர்வோர் முன்னணி குறிப்பிடுகையில், சந்தையிலுள்ள பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது இடைத்தரப்பினர் பாரிய இலாபம் பெறுவதாகவும் இந்த நிலை இல்லாமல் செய்யப்பட்டு, பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினர். இந்நாட்டின் கல்வியில் நீதி தொடர்பான பகுதியொன்று உள்வாங்கப்படுவது முக்கியமானது என ஐக்கிய ஒத்துழைப்பு முன்னணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

ஏற்றுமதித் துறையுடன் தொடர்புபட்ட சிறிய அளவிலான ஏற்றுமதியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கறுவா ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர். Uber, PickMe போன்ற கையடக்கத் தொலைபேசி செயலிகள் (App) இந்நாட்டில் தயாரித்து செயற்படுத்துவது இந்நாட்டில் அந்நியச் செலாவணியை சேகரிப்பதற்கு சிறந்த முறையாகும் என கொம்யூனிகேஷன் உரிமையாளர்களின் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

கட்டுமான சேவையாளர்கள் சங்கத்தினர் குறிப்பிடுகையில், மூலப்பொருட்களின் விலைகளை நிலையானதாக பேணுவது முக்கியமானது எனத் தெரிவித்தனர். அத்துடன், விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் குழுவில் கேட்டுக்கொண்டனர். பெரும்பாலான வாடகை வீட்டாளர்களுக்கு இந்நாட்டில் வாக்குரிமை இல்லை என அகில இலங்கை வாடகை வீட்டாளர்களின் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர். அத்துடன், பிள்ளைகளை பாடசாலைகளுக்குச் சேர்க்கும் போது பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும், வங்கிக் கடன் பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளதாகவும், இதற்குத் தீர்வு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர்கள் தெரிவித்தனர்.

தேயிலைத் தொழிற்துறை தற்பொழுது முடங்கியிருப்பதாகவும், இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என கீழை நாட்டு காணி உரிமையாளர்களின் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

இதன்போது குழுவின் தலைவர், இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுவருவதாகக் குறிப்பிட்டதுடன், ஒரு சில விடயங்கள் தொடர்பில் வருகை தந்திருந்த அரசாங்க அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.



கட்டுமான பொருட்களின் விலைகளை குறைக்க கோரிக்கை samugammedia நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் சங்கங்களின் பிரதிநிதிகள் துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.அதற்கமைய, மௌபிம சுரக்ஷா ஒன்றியம், தேசிய நுகர்வோர் முன்னணி, ஐக்கிய ஒத்துழைப்பு முன்னணி, கறுவா ஏற்றுமதியாளர்கள் சங்கம், கொம்யூனிகேஷன் உரிமையாளர்களின் சங்கம், கட்டுமான சேவையாளர்கள் சங்கம், அகில இலங்கை வாடகை வீட்டாளர்களின் சங்கம் மற்றும் கீழை நாட்டு காணி உரிமையாளர்களின் சங்கம் என்பன இந்தக் குழுக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பதிரன தலைமையில் கூடிய போதே இந்தத் தரப்பினர் அழைக்கப்பட்டிருந்தனர்.இதன்போது, இந்த ஒவ்வொரு தரப்பினரும் தமது முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் குழுவில் முன்வைத்தனர். மௌபிம சுரக்ஷா ஒன்றியத்தின் குழுவினர் குறிப்பிடுகையில், இந்நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும், விசேடமாக வீட்டு விவசாயப் பொருளாதாரத்தின் விருத்தி தொடர்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர். தேசிய நுகர்வோர் முன்னணி குறிப்பிடுகையில், சந்தையிலுள்ள பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது இடைத்தரப்பினர் பாரிய இலாபம் பெறுவதாகவும் இந்த நிலை இல்லாமல் செய்யப்பட்டு, பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினர். இந்நாட்டின் கல்வியில் நீதி தொடர்பான பகுதியொன்று உள்வாங்கப்படுவது முக்கியமானது என ஐக்கிய ஒத்துழைப்பு முன்னணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.ஏற்றுமதித் துறையுடன் தொடர்புபட்ட சிறிய அளவிலான ஏற்றுமதியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கறுவா ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர். Uber, PickMe போன்ற கையடக்கத் தொலைபேசி செயலிகள் (App) இந்நாட்டில் தயாரித்து செயற்படுத்துவது இந்நாட்டில் அந்நியச் செலாவணியை சேகரிப்பதற்கு சிறந்த முறையாகும் என கொம்யூனிகேஷன் உரிமையாளர்களின் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.கட்டுமான சேவையாளர்கள் சங்கத்தினர் குறிப்பிடுகையில், மூலப்பொருட்களின் விலைகளை நிலையானதாக பேணுவது முக்கியமானது எனத் தெரிவித்தனர். அத்துடன், விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் குழுவில் கேட்டுக்கொண்டனர். பெரும்பாலான வாடகை வீட்டாளர்களுக்கு இந்நாட்டில் வாக்குரிமை இல்லை என அகில இலங்கை வாடகை வீட்டாளர்களின் சங்கத்தினர் சுட்டிக்காட்டினர். அத்துடன், பிள்ளைகளை பாடசாலைகளுக்குச் சேர்க்கும் போது பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும், வங்கிக் கடன் பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளதாகவும், இதற்குத் தீர்வு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர்கள் தெரிவித்தனர்.தேயிலைத் தொழிற்துறை தற்பொழுது முடங்கியிருப்பதாகவும், இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என கீழை நாட்டு காணி உரிமையாளர்களின் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.இதன்போது குழுவின் தலைவர், இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுவருவதாகக் குறிப்பிட்டதுடன், ஒரு சில விடயங்கள் தொடர்பில் வருகை தந்திருந்த அரசாங்க அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

Advertisement

Advertisement

Advertisement