• Nov 22 2024

வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை..!

Sharmi / Aug 19th 2024, 11:18 am
image

கங்குவேலி பிரதேசத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறும், விவசாயம் மேற்கொண்டுவரும் காணிகளுக்கான ஆவணங்களை கையளிக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மூதூர் - கங்குவேலி பிரதேசத்தில் 1985ம் ஆண்டுக்கு முன்னர் விவசாயம் மேற்கொண்டு, யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களின் 76 ஏக்கர் காணிகளை வன இலாகா திணைக்களம் தங்களுக்கு சொந்தமான காணியென வீதியோரத்தில் இருந்து கல் இட்டுள்ளமையினால், மக்கள் தங்களின் காணிகளுக்குள் உள்ள பற்றைகளை அகற்றி பயிர் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும், பற்றைகள் வளர்ந்துள்ளமையினால் யானைகள் அவ்விடங்களுக்குள் சஞ்சாரம் செய்வதாகவும், இதனால் பாதையில் போக்குவரத்து செய்வது சிரமமாக இருப்பதாகவும், பல தடவைகள் இக்காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இக்காணிகளை விடுவித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உதவுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் மூதூர் - முன்னம்போடிவெட்டை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட திருக்கரைசையம்பதி விவசாய சம்மேளனம், பசுமை விவசாய சம்மேளனம் ஆகியவற்றின்கீழ் நெற்பயிற்செய்கை மேற்கொண்டுவரும் 1000க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கான ஆவணங்கள் இதுவரை கையளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக 1970ஆம் ஆண்டில் இருந்து குறித்த காணிகளில் விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் சிலரிடம் 1972ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வழங்கப்பட்ட வருடார்ந்த அனுமதிப்பத்திரம் உட்பட ஏக்கர்வரி, பசளை பெற்றுக் கொண்டதற்கான பற்றுச்சீட்டுகள் மற்றும் பல ஆவணங்கள் இருந்தும், இதுவரை பல காணிக் கச்சேரிகளில் கலந்து கொண்டுள்ள நிலையிலும் காணிக்கான ஆவணங்கள் எதுவும் இதுவரை கையளிக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

இது தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதும் அது இன்னும் முழுமை பெறவில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை. கங்குவேலி பிரதேசத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறும், விவசாயம் மேற்கொண்டுவரும் காணிகளுக்கான ஆவணங்களை கையளிக்குமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மூதூர் - கங்குவேலி பிரதேசத்தில் 1985ம் ஆண்டுக்கு முன்னர் விவசாயம் மேற்கொண்டு, யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களின் 76 ஏக்கர் காணிகளை வன இலாகா திணைக்களம் தங்களுக்கு சொந்தமான காணியென வீதியோரத்தில் இருந்து கல் இட்டுள்ளமையினால், மக்கள் தங்களின் காணிகளுக்குள் உள்ள பற்றைகளை அகற்றி பயிர் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும், பற்றைகள் வளர்ந்துள்ளமையினால் யானைகள் அவ்விடங்களுக்குள் சஞ்சாரம் செய்வதாகவும், இதனால் பாதையில் போக்குவரத்து செய்வது சிரமமாக இருப்பதாகவும், பல தடவைகள் இக்காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இக்காணிகளை விடுவித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உதவுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அத்துடன் மூதூர் - முன்னம்போடிவெட்டை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட திருக்கரைசையம்பதி விவசாய சம்மேளனம், பசுமை விவசாய சம்மேளனம் ஆகியவற்றின்கீழ் நெற்பயிற்செய்கை மேற்கொண்டுவரும் 1000க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கான ஆவணங்கள் இதுவரை கையளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக 1970ஆம் ஆண்டில் இருந்து குறித்த காணிகளில் விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் சிலரிடம் 1972ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வழங்கப்பட்ட வருடார்ந்த அனுமதிப்பத்திரம் உட்பட ஏக்கர்வரி, பசளை பெற்றுக் கொண்டதற்கான பற்றுச்சீட்டுகள் மற்றும் பல ஆவணங்கள் இருந்தும், இதுவரை பல காணிக் கச்சேரிகளில் கலந்து கொண்டுள்ள நிலையிலும் காணிக்கான ஆவணங்கள் எதுவும் இதுவரை கையளிக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். இது தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதும் அது இன்னும் முழுமை பெறவில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement