• May 03 2024

பண மதிப்பிழப்பு - மோடியின் யோசனைக்கு உயர்நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு!

Chithra / Jan 2nd 2023, 6:26 pm
image

Advertisement

பண மதிப்பிழப்பு தொடர்பில் இந்திய உயர்நீதிமன்றம் பிரதமர் நரேந்திர மோடியின் யோசனைக்கு சார்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ஆம் திகதி அறிவித்தார்.

இதன்கீழ், புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நாணய தாள்கள், செல்லாத தாள்களாக அறிவிக்கப்பட்டன.

அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

எனினும் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 57 பேர், உயர்நீதிமன்றில், நீதிப்பேராணை மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை நீதியரசர் அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம், மனுக்கள் மீதான தீர்ப்புக்கு திகதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 22-ஆம் திகதி ஒத்திவைத்தது. இந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே எனவும் செல்லும் அந்த நடவடிக்கையை திரும்ப பெற முடியாது எனத் தீர்ப்பளித்து எதிரான மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.


பண மதிப்பிழப்பு - மோடியின் யோசனைக்கு உயர்நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு பண மதிப்பிழப்பு தொடர்பில் இந்திய உயர்நீதிமன்றம் பிரதமர் நரேந்திர மோடியின் யோசனைக்கு சார்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ஆம் திகதி அறிவித்தார்.இதன்கீழ், புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நாணய தாள்கள், செல்லாத தாள்களாக அறிவிக்கப்பட்டன.அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.எனினும் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 57 பேர், உயர்நீதிமன்றில், நீதிப்பேராணை மனுக்களை தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகளை நீதியரசர் அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது.அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம், மனுக்கள் மீதான தீர்ப்புக்கு திகதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 22-ஆம் திகதி ஒத்திவைத்தது. இந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே எனவும் செல்லும் அந்த நடவடிக்கையை திரும்ப பெற முடியாது எனத் தீர்ப்பளித்து எதிரான மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement