• Apr 10 2025

23 ஆயிரத்தைத் தொட்ட டெங்கு நோயாளர்கள்! வடக்கு உட்பட 4 பிரிவுகள் அபாயத்தில்..!

Chithra / May 10th 2024, 3:18 pm
image

 

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 899 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 

வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 397 பேரும், மத்திய மாகாணத்தில் 1977 பேரும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

அத்தோடு, 4 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாயமுள்ள வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை 22 ஆயிரத்து 943 டெங்கு நோயாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர். 

எனவே, டெங்கு நோய்ப் பரவலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

23 ஆயிரத்தைத் தொட்ட டெங்கு நோயாளர்கள் வடக்கு உட்பட 4 பிரிவுகள் அபாயத்தில்.  நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 899 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 397 பேரும், மத்திய மாகாணத்தில் 1977 பேரும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்தோடு, 4 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாயமுள்ள வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை 22 ஆயிரத்து 943 டெங்கு நோயாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர். எனவே, டெங்கு நோய்ப் பரவலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now