• Apr 03 2025

யாழில் அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்...!

Sharmi / May 10th 2024, 3:22 pm
image

அட்சய திருதியை நாளான இன்றையதினம் யாழிலுள்ள நகை  நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அட்சய திருதியை நன்நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வச் செழிப்பு அதிகரிக்கும் என்பது மக்களிடையே காலாதிகாலமாக நிலவும் ஐதீகமாகும்.

அந்தவகையில் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தங்கத்தினை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டாத சூழ்நிலையில் இம்முறை ஓரளவு நெருக்கடி நிலை தீர்ந்த நிலையில் தங்க கொள்வனவில் மக்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் யாழ் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நகைக்கடைகளில் இன்று காலை முதல் ஏராளமான மக்கள் நகைகளை வாங்குவதற்காக காத்திருந்தமையை அவதானிக்க முடிந்துள்ளது.

யாழில் அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம். அட்சய திருதியை நாளான இன்றையதினம் யாழிலுள்ள நகை  நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அட்சய திருதியை நன்நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வச் செழிப்பு அதிகரிக்கும் என்பது மக்களிடையே காலாதிகாலமாக நிலவும் ஐதீகமாகும்.அந்தவகையில் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தங்கத்தினை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டாத சூழ்நிலையில் இம்முறை ஓரளவு நெருக்கடி நிலை தீர்ந்த நிலையில் தங்க கொள்வனவில் மக்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.இந்நிலையில் யாழ் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நகைக்கடைகளில் இன்று காலை முதல் ஏராளமான மக்கள் நகைகளை வாங்குவதற்காக காத்திருந்தமையை அவதானிக்க முடிந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement