• May 21 2024

பட்டதாரிகளுக்கு அநீதி இழைப்பு..! - சபையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

Chithra / May 10th 2024, 3:39 pm
image

Advertisement

 


மேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் வர்த்தகப் பிரிவு பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து  இவ்வாறு தெரிவித்தார்.

மேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

6000 வெற்றிடங்களில் 2951 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் வர்த்தகப் பிரிவுப் பட்டதாரிகளில் 1200 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் ஒரு வர்த்தக பட்டதாரிக்கேனும் இதுவரை நியமனம் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் அவதானம் செலுத்தி அவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

பட்டதாரிகளுக்கு அநீதி இழைப்பு. - சபையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்  மேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் வர்த்தகப் பிரிவு பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து  இவ்வாறு தெரிவித்தார்.மேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.6000 வெற்றிடங்களில் 2951 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் வர்த்தகப் பிரிவுப் பட்டதாரிகளில் 1200 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் ஒரு வர்த்தக பட்டதாரிக்கேனும் இதுவரை நியமனம் கிடைக்கவில்லை.இது தொடர்பில் அவதானம் செலுத்தி அவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement