• Nov 24 2024

வவுனியாவில் டெங்கு தாக்கம் குறைவு - முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...!samugammedia

Anaath / Jan 3rd 2024, 12:36 pm
image

வவுனியா பொது வைத்தியசாலையில் 39 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. அதனடிப்டையில் வவுனியா வைத்தியசாலையில் 39 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும், குறித்த 39 பேரும் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சென்று வந்த நிலையிலேயே டெங்கு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் டெங்கு தொற்று தாக்கம் பெரியளவில் ஏற்படவில்லை.

எனினும், பொதுமக்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழித்து டெங்கு தொற்றில் இருந்து தம்மையும், சமூகத்தையும் காக்க முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் டெங்கு தாக்கம் குறைவு - முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.samugammedia வவுனியா பொது வைத்தியசாலையில் 39 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. அதனடிப்டையில் வவுனியா வைத்தியசாலையில் 39 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனினும், குறித்த 39 பேரும் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சென்று வந்த நிலையிலேயே டெங்கு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் டெங்கு தொற்று தாக்கம் பெரியளவில் ஏற்படவில்லை.எனினும், பொதுமக்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழித்து டெங்கு தொற்றில் இருந்து தம்மையும், சமூகத்தையும் காக்க முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement