• May 13 2024

ஜனாதிபதியுடனான சந்திப்பில் விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிப்படுத்த அனுமதி மறுப்பு...! samugammedia

Sharmi / Jan 10th 2024, 3:27 pm
image

Advertisement

விவசாய அமைப்புக்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பில் தமது பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் கிளிநொச்சி பகுதிக்கு  வருகைதந்த  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தினரையும் அழைத்திருந்தார்.

தற்பொழுது விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பல்வேறு விதமான விடயங்களை கதைப்பதற்காக அங்கு சென்றிருந்த பொழுது எவருமே ஜனாதிபதியிடம் தமது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கதைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை.

அப்படி இருக்கையில் எதற்காக ஜனாதிபதி எம்மை அழைத்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த வருடங்களை விட இவ்வருடம் பல்வேறு வகையிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வருடம் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்ட சில நாட்கள் மழையின்றி தண்ணீர் இன்றி பெரிதும் அவதியுற்றதாகவும் பின்னர் மடிச்சு கட்டி நோய் தாக்கம் காரணமாகவும் தத்தி நோய் தாக்கம் காரணமாகவும்  நெற்செய்கையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பலரது விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு விவசாயக் காப்புறுதித் திணைக்களம் இதுவரையில் குறித்த பகுதிக்கும் அழிவு தொடர்பாக பார்வையிடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு 12 மூட்டைகள் மாத்திரமே அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும், இந்நிலை தொடருமாயின் விவசாய செய்கையை விட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளது.

எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் விவசாயிகளையும் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிப்படுத்த அனுமதி மறுப்பு. samugammedia விவசாய அமைப்புக்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பில் தமது பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,கடந்த வாரம் கிளிநொச்சி பகுதிக்கு  வருகைதந்த  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தினரையும் அழைத்திருந்தார்.தற்பொழுது விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பல்வேறு விதமான விடயங்களை கதைப்பதற்காக அங்கு சென்றிருந்த பொழுது எவருமே ஜனாதிபதியிடம் தமது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கதைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை.அப்படி இருக்கையில் எதற்காக ஜனாதிபதி எம்மை அழைத்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.கடந்த வருடங்களை விட இவ்வருடம் பல்வேறு வகையிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வருடம் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்ட சில நாட்கள் மழையின்றி தண்ணீர் இன்றி பெரிதும் அவதியுற்றதாகவும் பின்னர் மடிச்சு கட்டி நோய் தாக்கம் காரணமாகவும் தத்தி நோய் தாக்கம் காரணமாகவும்  நெற்செய்கையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பலரது விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு விவசாயக் காப்புறுதித் திணைக்களம் இதுவரையில் குறித்த பகுதிக்கும் அழிவு தொடர்பாக பார்வையிடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.தற்பொழுது பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு 12 மூட்டைகள் மாத்திரமே அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும், இந்நிலை தொடருமாயின் விவசாய செய்கையை விட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளது.எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் விவசாயிகளையும் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement