• Nov 25 2024

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

Chithra / Oct 11th 2024, 2:08 pm
image

 

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை முதல் நானுஓயா வரையில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் அவ்வீதியில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாக இருக்குமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளில் இன்று (11) காலை முதல் இடையிடையே பெய்து வரும் கடும் மழையினால் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடும் மழையுடன் ஹட்டன் உள்ளிட்ட மலையகப் பிரதேசங்களில் கடுமையான காலநிலையுடன் கடும் குளிர் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை  ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை முதல் நானுஓயா வரையில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் அவ்வீதியில் வாகனங்களை செலுத்தும் போது கவனமாக இருக்குமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளில் இன்று (11) காலை முதல் இடையிடையே பெய்து வரும் கடும் மழையினால் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கடும் மழையுடன் ஹட்டன் உள்ளிட்ட மலையகப் பிரதேசங்களில் கடுமையான காலநிலையுடன் கடும் குளிர் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement