• Nov 23 2024

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு; மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் அவசர எச்சரிக்கை

Chithra / Sep 8th 2024, 12:23 pm
image

 

மத்திய வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்புள்ள நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடல் மற்றும் மீனவ மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 2 நாட்களில் ஒடிசா கடற்கரையை அடையும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  குறித்த கடற்பகுதியில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று  பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு; மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் அவசர எச்சரிக்கை  மத்திய வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்புள்ள நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடல் மற்றும் மீனவ மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 2 நாட்களில் ஒடிசா கடற்கரையை அடையும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை,  குறித்த கடற்பகுதியில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.இதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று  பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement