• May 07 2025

வெறிச்சோடி காணப்படும் வாக்களிப்பு நிலையங்கள்! மந்த நிலையில் வாக்களிப்பு

Chithra / May 6th 2025, 3:52 pm
image

 

உள்ளூராட்சி மன்ற தேர்தலானது யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.

இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் பி. ப 2 மணி நிலவரப்படி 44 .03  வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிப்பு மந்த கதியில் இடம்பெறுவது குறைந்தளவு வாக்காளர்களே வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது. 

இதனால் வாக்களிப்பு நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது.


இதேவேளை வவுனியாவில் மதியத்திற்கு பின்னர் வாக்களிப்பு மந்த நிலையை அடைந்துள்ளது.

வவுனியாவில் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை என்பவற்றுக்கான தேர்தல் நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 9 மணிவரை 31 வீதமாக காணப்பட்ட வாக்களிப்பு வீதம் மதியம் 2 மண வரை49.2 வீதமாக காணப்படுவதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தேர்தலில் பெரியளவில் ஆர்வம் காட்டாமையே இந்த மந்த நிலைக்கு காரணம் எனப் பலரும் சுட்டி காட்டியுள்ளனர்.


மேலும் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் வாக்களிப்பு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறிப்பாக திகாமடுல்ல தேர்தல்  மாவட்டத்தில்  அம்பாறை, பொத்துவில் , சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள்    வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில்  உள்ளுராட்சி மன்ற   தேர்தலுக்காக  19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக    4,78000  வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 


வெறிச்சோடி காணப்படும் வாக்களிப்பு நிலையங்கள் மந்த நிலையில் வாக்களிப்பு  உள்ளூராட்சி மன்ற தேர்தலானது யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் பி. ப 2 மணி நிலவரப்படி 44 .03  வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.வாக்களிப்பு மந்த கதியில் இடம்பெறுவது குறைந்தளவு வாக்காளர்களே வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது. இதனால் வாக்களிப்பு நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது.இதேவேளை வவுனியாவில் மதியத்திற்கு பின்னர் வாக்களிப்பு மந்த நிலையை அடைந்துள்ளது.வவுனியாவில் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை என்பவற்றுக்கான தேர்தல் நடைபெற்று வருகின்றது.இன்று காலை 9 மணிவரை 31 வீதமாக காணப்பட்ட வாக்களிப்பு வீதம் மதியம் 2 மண வரை49.2 வீதமாக காணப்படுவதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.மக்கள் தேர்தலில் பெரியளவில் ஆர்வம் காட்டாமையே இந்த மந்த நிலைக்கு காரணம் எனப் பலரும் சுட்டி காட்டியுள்ளனர்.மேலும் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் வாக்களிப்பு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறிப்பாக திகாமடுல்ல தேர்தல்  மாவட்டத்தில்  அம்பாறை, பொத்துவில் , சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள்    வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அம்பாறை மாவட்டத்தில்  உள்ளுராட்சி மன்ற   தேர்தலுக்காக  19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக    4,78000  வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement