சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகையை அழிக்கும் நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது உதவி சுங்க பணிப்பாளர் நாயகமும் சுங்க ஊடகப் பேச்சாளருமான சீவளி அருக்கொட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
"கடந்த ஆண்டு வரி செலுத்தாமல் சம்பந்தப்பட்ட சிகரெட் தொகுதி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதுடன், இது 1.2 பில்லியன் ரூபா பெறுமதியானது.
அத்தோடு சுகாதார அறிவுறுத்தல்கள் எதுவுமே காட்சிப்படுத்தப்படவில்லை. ஆகவே இவ்வாறான சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுமாயின் நாட்டில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்தார்.
இலங்கை சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், இலங்கை புகையிலை நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள சட்டவிரோத சிகரெட் அழிப்பு முற்றத்திலேயே இந்த சிகரெட் தொகை அழிக்கப்பட்டது.
மேலும், 2024, 2022 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் தொகுதி, சுங்க விசாரணைகளைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகையை அழிக்கும் நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது.இதன்போது உதவி சுங்க பணிப்பாளர் நாயகமும் சுங்க ஊடகப் பேச்சாளருமான சீவளி அருக்கொட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்"கடந்த ஆண்டு வரி செலுத்தாமல் சம்பந்தப்பட்ட சிகரெட் தொகுதி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதுடன், இது 1.2 பில்லியன் ரூபா பெறுமதியானது. அத்தோடு சுகாதார அறிவுறுத்தல்கள் எதுவுமே காட்சிப்படுத்தப்படவில்லை. ஆகவே இவ்வாறான சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுமாயின் நாட்டில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்தார். இலங்கை சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், இலங்கை புகையிலை நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள சட்டவிரோத சிகரெட் அழிப்பு முற்றத்திலேயே இந்த சிகரெட் தொகை அழிக்கப்பட்டது.மேலும், 2024, 2022 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் தொகுதி, சுங்க விசாரணைகளைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.