• Nov 28 2024

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஆசிரியர் சேவைக்குள் நிரந்தரமாக்கப்பட வேண்டும்...! லோகதாஸ் தெரிவிப்பு...!samugammedia

Sharmi / Dec 30th 2023, 8:46 am
image

பாடசாலைகளில் பணியாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்குள்  நிரந்தரமாக்கப்பட வேண்டும் என வடமாகாண பட்டத்தாரிகள் ஒன்றியத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

பாடசாலைகளில் பணியாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்ககுள்  நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 2020 ஆண்டு முன்னால் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சியில் பட்டதாரி பயிலுனர்களாக பிரதேச செயலகங்களில் உள்வாங்கப்பட்டோம்.

கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பட்ட நிலையில் அந்த வெற்றிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டு இருந்தோம். அதன் அடிப்படையில்  வலயத்தின் ஊடாக வெற்றிடமுள்ள பாடங்களின் பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்டோம்.

ஓன்டரை வருடங்களின் பின் நிரந்தரமாக்கப்படுவதற்கான நேர்முக தேர்வு நடைபெற்று நேர்முகத்தேர்விலே பாடசாலையிலேயே பணியாற்றுமாறு பணிக்கப்பட்டோம் 

பாடசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த கால கட்டத்திலேயே கல்வியமைச்சால் ஆசிரியர்களுக்கான வெற்றிட விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தது. அந்த விண்ணப்பங்களை 35க்கும் மேற்பட்ட பட்டதாரிகளால் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. இந்த நிலையிலே  35 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டோம் பல நிபந்தனைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம்.

அதன் அடிப்படையிலே ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்க கூறி உச்சநீதிமன்றத்திற்கு வழக்குத்தாக்கல் செய்திருந்தோம். இந்த நிலையிலே ஆசிரியர் சேவையோடு அபிவிருத்தி உத்தியோகர் செய்யும் வேலைகளையும் செய்து கொண்டு உள்ளோம்.

கடந்த ஏழாம் திகதி கல்வியமைச்சர் சுசில்பிரேமஜெயந்த அவர்களை பட்டதார்களின் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடிய போது கல்வியமைச்சர் டிசம்பர் மாதம் 20 திகதிக்குள்ளே அனைவரையும் ஆசிரியர் சேவைக்குள்ளே உள்வாங்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார் ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை 

எனவே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஆசிரியர் சேவைக்குள் நிரந்தரமாக்கப்பட வேண்டும். லோகதாஸ் தெரிவிப்பு.samugammedia பாடசாலைகளில் பணியாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்குள்  நிரந்தரமாக்கப்பட வேண்டும் என வடமாகாண பட்டத்தாரிகள் ஒன்றியத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாடசாலைகளில் பணியாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்ககுள்  நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 2020 ஆண்டு முன்னால் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சியில் பட்டதாரி பயிலுனர்களாக பிரதேச செயலகங்களில் உள்வாங்கப்பட்டோம்.கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பட்ட நிலையில் அந்த வெற்றிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டு இருந்தோம். அதன் அடிப்படையில்  வலயத்தின் ஊடாக வெற்றிடமுள்ள பாடங்களின் பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்டோம்.ஓன்டரை வருடங்களின் பின் நிரந்தரமாக்கப்படுவதற்கான நேர்முக தேர்வு நடைபெற்று நேர்முகத்தேர்விலே பாடசாலையிலேயே பணியாற்றுமாறு பணிக்கப்பட்டோம் பாடசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த கால கட்டத்திலேயே கல்வியமைச்சால் ஆசிரியர்களுக்கான வெற்றிட விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தது. அந்த விண்ணப்பங்களை 35க்கும் மேற்பட்ட பட்டதாரிகளால் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. இந்த நிலையிலே  35 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டோம் பல நிபந்தனைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம்.அதன் அடிப்படையிலே ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்க கூறி உச்சநீதிமன்றத்திற்கு வழக்குத்தாக்கல் செய்திருந்தோம். இந்த நிலையிலே ஆசிரியர் சேவையோடு அபிவிருத்தி உத்தியோகர் செய்யும் வேலைகளையும் செய்து கொண்டு உள்ளோம்.கடந்த ஏழாம் திகதி கல்வியமைச்சர் சுசில்பிரேமஜெயந்த அவர்களை பட்டதார்களின் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடிய போது கல்வியமைச்சர் டிசம்பர் மாதம் 20 திகதிக்குள்ளே அனைவரையும் ஆசிரியர் சேவைக்குள்ளே உள்வாங்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார் ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை எனவே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement