• Jan 26 2025

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்; சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் ஆராய்வு..!

Sharmi / Jan 3rd 2025, 3:50 pm
image

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (03) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதியின் நெறியாழ்கையின் கீழ்,  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் கேமச்சந்திர தலைமையில் இடம் பெற்றது. 

இதில் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறைபாடுகள் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

குறிப்பாக மனித யானை மோதல், வீதி அபிவிருத்தி , இயற்கை அனர்த்தத்தின் போதான வடிகான் நிலவரம், சட்ட விரோத மண் அகழ்வு, விவசாயிகளுக்கான பசளை  , கல்வி சுகாதாரம் என பல முக்கிய தீர்மானங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின் குறித்த முதலாவது கூட்டம் இதுவாகும்.

இதன் போது பிரதியமைச்சர் கூறுகையில்,

ஊழலை ஒழிக்க வேண்டும். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முன்னுரிமை அடிப்படையில் இருப்பது மட்டுமன்றி அரசியலை இலக்காக கொண்டு இடம் பெற கூடாது எனவும்  தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதி செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட திணைக்கள பொறுப்பதிகாரிகள் துறைசார் அரசாங்க உத்தியோகத்தர்கள் ,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், சண்முகம் குகதாசன் ஆகியோர்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்; சட்ட விரோத மண் அகழ்வு தொடர்பில் ஆராய்வு. திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (03) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதியின் நெறியாழ்கையின் கீழ்,  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் கேமச்சந்திர தலைமையில் இடம் பெற்றது. இதில் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறைபாடுகள் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன. குறிப்பாக மனித யானை மோதல், வீதி அபிவிருத்தி , இயற்கை அனர்த்தத்தின் போதான வடிகான் நிலவரம், சட்ட விரோத மண் அகழ்வு, விவசாயிகளுக்கான பசளை  , கல்வி சுகாதாரம் என பல முக்கிய தீர்மானங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின் குறித்த முதலாவது கூட்டம் இதுவாகும். இதன் போது பிரதியமைச்சர் கூறுகையில், ஊழலை ஒழிக்க வேண்டும். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முன்னுரிமை அடிப்படையில் இருப்பது மட்டுமன்றி அரசியலை இலக்காக கொண்டு இடம் பெற கூடாது எனவும்  தெரிவித்தார்.குறித்த கூட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதி செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட திணைக்கள பொறுப்பதிகாரிகள் துறைசார் அரசாங்க உத்தியோகத்தர்கள் ,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், சண்முகம் குகதாசன் ஆகியோர்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement