• Sep 20 2024

மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு மீனவருக்கு தோனி அன்பளிப்பு! samugammedia

Tamil nila / Jun 11th 2023, 4:31 pm
image

Advertisement

மட்டக்களப்பு வாகரையில் நீண்டகாலமாக மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தோனி இன்றி தவீத்த மீனவர் ஒருவருக்கு தோனி இன்று வழங்கப்பட்டது.

 5 ஆம் வட்டாரம் வாகரையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான க.இன்பராஜா என்பவருக்கே இவ் மனித நேய உதவி வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக மீன் பிடித் தொழில் ஈடுபட்டு வருவதாகவும் தனக்கு தோனி இல்லாத காரணத்தால் அயலவர்களின் உதவியுடன் தோனியினை பெற்று மீன் பிடி தொழில் ஈடுபட்டு வந்ததாகவும் இதனால் தாம் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன் தோனியொன்றினை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி வசதியுமின்றி துன்பப்பட்டதாக கூறினார்.

தற்போது வாசம் உதவும் கரங்கள் அமைப்பினர் தம் நிலவரம் அறிந்து அதன் தலைவர் வே.பிரபாகரன் விடுத்த வேண்டுகோளினையடுத்து புலம் பெயர் நாட்டிலுள்ள உறவுகளான கனடா நாட்டைச் சேர்ந்த பிறேம் மற்றும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த லோகன் குடும்பத்தினர் இணைந்து இவ் மனித நேய உதவியினை வழங்கியுள்ளனர்.




மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு மீனவருக்கு தோனி அன்பளிப்பு samugammedia மட்டக்களப்பு வாகரையில் நீண்டகாலமாக மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தோனி இன்றி தவீத்த மீனவர் ஒருவருக்கு தோனி இன்று வழங்கப்பட்டது. 5 ஆம் வட்டாரம் வாகரையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான க.இன்பராஜா என்பவருக்கே இவ் மனித நேய உதவி வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக மீன் பிடித் தொழில் ஈடுபட்டு வருவதாகவும் தனக்கு தோனி இல்லாத காரணத்தால் அயலவர்களின் உதவியுடன் தோனியினை பெற்று மீன் பிடி தொழில் ஈடுபட்டு வந்ததாகவும் இதனால் தாம் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாகவும் தெரிவித்தார்.அத்துடன் தோனியொன்றினை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி வசதியுமின்றி துன்பப்பட்டதாக கூறினார்.தற்போது வாசம் உதவும் கரங்கள் அமைப்பினர் தம் நிலவரம் அறிந்து அதன் தலைவர் வே.பிரபாகரன் விடுத்த வேண்டுகோளினையடுத்து புலம் பெயர் நாட்டிலுள்ள உறவுகளான கனடா நாட்டைச் சேர்ந்த பிறேம் மற்றும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த லோகன் குடும்பத்தினர் இணைந்து இவ் மனித நேய உதவியினை வழங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement