குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று காலை பிடியாணை பிறப்பித்தார்
டயானா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆஜரானதை அடுத்து, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் பிடியாணையை திரும்பப் பெற உத்தரவிட்டது.
செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்தது மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தவறான அறிக்கைகளை வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டயானா கமகே மீது குற்றப்புலனாய்வுத் துறை (CID) 07 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தது.
டயானாவின் கைது பிடியாணையை திரும்பப் பெற உத்தரவு குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று காலை பிடியாணை பிறப்பித்தார் டயானா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆஜரானதை அடுத்து, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் பிடியாணையை திரும்பப் பெற உத்தரவிட்டது.செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்தது மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தவறான அறிக்கைகளை வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டயானா கமகே மீது குற்றப்புலனாய்வுத் துறை (CID) 07 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தது.