• Oct 30 2024

கச்சதீவை இந்தியாவுக்கு இரகசியமாக விற்றுவிட்டார்களா? கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் அமைப்பாளர் சட்டத்தரணி அருண் கேள்வி !

Tamil nila / Jun 30th 2024, 7:24 pm
image

Advertisement

இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை இந்தியா அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங்கம் இரகசியமாக விற்றுள்ளார்களா என சந்தேகம் எழுவதாக கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் அமைப்பாளர் சட்டத்தரணி அருன்ஹேமச்சந்திர தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று  இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில் இந்திய மீனவர்களின் தாக்குதலினால் இலங்கை இரானுவ படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

1921ம் ஆண்டில் இருந்து இலங்கைக்கே உரித்தான கச்சதீவு பிரதேசம் 1972ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு சொந்தமாக காணப்பட்டது .

இந்திய தேர்தலின் போது கச்சதீவை மீட்போம் என்கின்ற கோசத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் இது தொடர்பில் குரல் எழுப்பினர் தேர்தலின் பின் அது மறைந்தாலும் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது ஆட்சியில் இருக்கும் அரசியல் வாதிகள் சுய இலாப நோக்கத்துக்காக வாழ்கிறார்கள் ஜனாதிபதி நரேந்திரமோடி அருகாமையில் இருக்கும் போது ஒரு கதையினையும் மக்களிடத்தில் ஒரு கதையினையும் கூறி வருகிறார்.

இலங்கை அரசாங்கம் தெளிவான விளக்கத்தை கூற மறுத்திருக்கிறது வடகிழக்கு பிரதேசம் இந்தியாவுடன் சேர்ந்து அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார் ஆனால் சில விடயங்களை ஏற்க முடியாது . 

இவ் விடயத்தில் தேசப்பற்று மக்கள் கரிசனை இல்லாமல் ஈடுபடுவார்களானால் கிழக்கு மக்கள் என்ற ரீதியில் தொடர்ந்தும் இது விடயத்தில் போராடுவோம் என்றார்.

மேலும் திருகோணமலை நகர சபையின் அதிரடி இடமாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது இது தொடர்பில் கூறும் போது சில பல கலாசார நிகழ்வுகளுக்குள் மறைந்து கொண்டு சிலவர்களை கைக்குள் வைத்து ஆளுனர் முறையற்ற விதத்தில் செயற்படுகிறார்.

இந்த இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம் ஆளுனரின் கட்டளைகளை நிறைவேற்றாமையே இடமாற்றம் செய்யப்பட்டார் மக்களின் வரிப் பணங்களை நிலையான வைப்புக்களை கோரிய போது அதனை மறுத்த செயலாளரை ஆளுனர் இடமாற்றியுள்ளார் இது மாத்திரமல்ல உள்ளூராட்சி சபைகளுக்கு சூரிய சக்தி மின் விளக்குகள் தொடர்பான திட்டம் தொடர்பில் பேசப்பட்டது.

இது முறையாக கேள்வி மனு மூலமாக வழங்கப்பட வேண்டும் அபிவிருத்தி,வியாபாரம் என்ற போர்வையில் காணிகளை தமது நண்பர்களுக்கு  வழங்க முனைப்புக் காட்டியிருந்த போது சட்ட விரோத நீதிக்கு முரணான விடய இடமாற்றமே இது .

தமது கடமைகளை சரியாக செய்த போதும் முறைகேடான இடமாற்றமே இது விலை மதிப்பான சொத்துக்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் விற்கப்படுகிறது பிழையான அரசியல் கலாசாரம் இருந்தால் நாடு சீரழியும் ஊழலுக்கு எதிராக எமது அமைப்பு தொடர்ந்தும் குரல் கொடுக்க எந்தவித நிபந்தனையும் இன்றி தயாராக உள்ளோம் என்றார்.


கச்சதீவை இந்தியாவுக்கு இரகசியமாக விற்றுவிட்டார்களா கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் அமைப்பாளர் சட்டத்தரணி அருண் கேள்வி இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை இந்தியா அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங்கம் இரகசியமாக விற்றுள்ளார்களா என சந்தேகம் எழுவதாக கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் அமைப்பாளர் சட்டத்தரணி அருன்ஹேமச்சந்திர தெரிவித்தார்.திருகோணமலையில் இன்று  இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் இந்திய மீனவர்களின் தாக்குதலினால் இலங்கை இரானுவ படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 1921ம் ஆண்டில் இருந்து இலங்கைக்கே உரித்தான கச்சதீவு பிரதேசம் 1972ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு சொந்தமாக காணப்பட்டது .இந்திய தேர்தலின் போது கச்சதீவை மீட்போம் என்கின்ற கோசத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் இது தொடர்பில் குரல் எழுப்பினர் தேர்தலின் பின் அது மறைந்தாலும் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது ஆட்சியில் இருக்கும் அரசியல் வாதிகள் சுய இலாப நோக்கத்துக்காக வாழ்கிறார்கள் ஜனாதிபதி நரேந்திரமோடி அருகாமையில் இருக்கும் போது ஒரு கதையினையும் மக்களிடத்தில் ஒரு கதையினையும் கூறி வருகிறார்.இலங்கை அரசாங்கம் தெளிவான விளக்கத்தை கூற மறுத்திருக்கிறது வடகிழக்கு பிரதேசம் இந்தியாவுடன் சேர்ந்து அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார் ஆனால் சில விடயங்களை ஏற்க முடியாது . இவ் விடயத்தில் தேசப்பற்று மக்கள் கரிசனை இல்லாமல் ஈடுபடுவார்களானால் கிழக்கு மக்கள் என்ற ரீதியில் தொடர்ந்தும் இது விடயத்தில் போராடுவோம் என்றார்.மேலும் திருகோணமலை நகர சபையின் அதிரடி இடமாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது இது தொடர்பில் கூறும் போது சில பல கலாசார நிகழ்வுகளுக்குள் மறைந்து கொண்டு சிலவர்களை கைக்குள் வைத்து ஆளுனர் முறையற்ற விதத்தில் செயற்படுகிறார்.இந்த இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம் ஆளுனரின் கட்டளைகளை நிறைவேற்றாமையே இடமாற்றம் செய்யப்பட்டார் மக்களின் வரிப் பணங்களை நிலையான வைப்புக்களை கோரிய போது அதனை மறுத்த செயலாளரை ஆளுனர் இடமாற்றியுள்ளார் இது மாத்திரமல்ல உள்ளூராட்சி சபைகளுக்கு சூரிய சக்தி மின் விளக்குகள் தொடர்பான திட்டம் தொடர்பில் பேசப்பட்டது.இது முறையாக கேள்வி மனு மூலமாக வழங்கப்பட வேண்டும் அபிவிருத்தி,வியாபாரம் என்ற போர்வையில் காணிகளை தமது நண்பர்களுக்கு  வழங்க முனைப்புக் காட்டியிருந்த போது சட்ட விரோத நீதிக்கு முரணான விடய இடமாற்றமே இது .தமது கடமைகளை சரியாக செய்த போதும் முறைகேடான இடமாற்றமே இது விலை மதிப்பான சொத்துக்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் விற்கப்படுகிறது பிழையான அரசியல் கலாசாரம் இருந்தால் நாடு சீரழியும் ஊழலுக்கு எதிராக எமது அமைப்பு தொடர்ந்தும் குரல் கொடுக்க எந்தவித நிபந்தனையும் இன்றி தயாராக உள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement