• Jan 23 2026

நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள் - விடுமுறை தொடர்பிலும் அறிவிப்பு

Chithra / Jan 20th 2026, 6:57 pm
image

 

உயர்தரப் பரீட்சை காரணமாக மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

 

இதன்படி, இந்த ஆண்டு பாடசாலையின் முதலாம் தவணையின் முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 

இதேவேளை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

 

அதே நேரத்தில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள் - விடுமுறை தொடர்பிலும் அறிவிப்பு  உயர்தரப் பரீட்சை காரணமாக மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதன்படி, இந்த ஆண்டு பாடசாலையின் முதலாம் தவணையின் முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதேவேளை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும். அதே நேரத்தில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement