• Mar 16 2026

தற்காலிக வீட்டில் கடனாளிகளாக வசித்து வருகின்றோம்; ஆளுநர் அலுவலகம் முன் திரண்ட பெரிய விளான் மக்கள்

Chithra / Jan 20th 2026, 6:23 pm
image



யாழ். மாவட்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 3/153 இலக்க பெரிய விளான் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மக்கள், வீட்டுத் திட்ட கொடுப்பனவை வழங்குமாறு கோரி, இன்றையதினம் வடக்கு மாகாண அளுநர் செயலகத்திற்கு முன் ஒன்றுதிரண்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 


இதன்போது கருத்து தெரிவித்த மக்கள், 


2019ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் எமது கிராமத்திற்கு 62 வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன.


இதன்போது கொடுப்பனவாக ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டன.   

அதன் பின் ஆட்சி மாறியதால் எவ்வித கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. 


நாங்கள் வீட்டு வேலைகளின் ஆரம்ப கட்டத்தினை தொடங்குவதற்காக பல வங்கிகளில் கடனுதவிகளை பெற்றதோடு தங்க நகைகளை அடைவு வைத்தும் அதனை மீள பெறாத நிலையில் பல சிரமத்தின் மத்தியில் வாழ்கின்றோம். 


இவ்வீட்டினை முழுமையாக செய்து முடிக்காத நிலையில் தற்காலிக வீட்டில் கடனாளிகளாக வசித்து வருகின்றோம்,


'டித்வா' புயல் காரணமாகவும் பல அசௌகரியத்தையும் சந்தித்துள்ளோம். ஆனால் எந்த அரசியல்வாதியும் எம்மை வங்து பார்த்து எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை  


இந்நிலையில்  நாம் நிரந்தமாக வீட்டினை கட்டி முடிப்பதற்கு உரிய நிதியுதவினை தற்றுதவுமாறு  ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநரிடம் சேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தனர். 


இந்நிலையில் இன்றைய போராட்டத்தின் போது மக்களை ஆளுநர் செயலகத்திற்குள் பொலிஸார் நுழைய அனுமதிக்காததால் சற்று பதற்ற நிலை உருவானது. 


அதன்பின் போராட்டக்காரர்கள் மூவரை அதிகாரிகள் உள்ளே அழைத்து பேசியதுடன் இதுதொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற்றுத் தருவதாக கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.


எனினும் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் திட்கட்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மக்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


தற்காலிக வீட்டில் கடனாளிகளாக வசித்து வருகின்றோம்; ஆளுநர் அலுவலகம் முன் திரண்ட பெரிய விளான் மக்கள் யாழ். மாவட்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 3/153 இலக்க பெரிய விளான் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மக்கள், வீட்டுத் திட்ட கொடுப்பனவை வழங்குமாறு கோரி, இன்றையதினம் வடக்கு மாகாண அளுநர் செயலகத்திற்கு முன் ஒன்றுதிரண்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதன்போது கருத்து தெரிவித்த மக்கள், 2019ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் எமது கிராமத்திற்கு 62 வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன.இதன்போது கொடுப்பனவாக ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டன.   அதன் பின் ஆட்சி மாறியதால் எவ்வித கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. நாங்கள் வீட்டு வேலைகளின் ஆரம்ப கட்டத்தினை தொடங்குவதற்காக பல வங்கிகளில் கடனுதவிகளை பெற்றதோடு தங்க நகைகளை அடைவு வைத்தும் அதனை மீள பெறாத நிலையில் பல சிரமத்தின் மத்தியில் வாழ்கின்றோம். இவ்வீட்டினை முழுமையாக செய்து முடிக்காத நிலையில் தற்காலிக வீட்டில் கடனாளிகளாக வசித்து வருகின்றோம்,'டித்வா' புயல் காரணமாகவும் பல அசௌகரியத்தையும் சந்தித்துள்ளோம். ஆனால் எந்த அரசியல்வாதியும் எம்மை வங்து பார்த்து எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை  இந்நிலையில்  நாம் நிரந்தமாக வீட்டினை கட்டி முடிப்பதற்கு உரிய நிதியுதவினை தற்றுதவுமாறு  ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநரிடம் சேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தனர். இந்நிலையில் இன்றைய போராட்டத்தின் போது மக்களை ஆளுநர் செயலகத்திற்குள் பொலிஸார் நுழைய அனுமதிக்காததால் சற்று பதற்ற நிலை உருவானது. அதன்பின் போராட்டக்காரர்கள் மூவரை அதிகாரிகள் உள்ளே அழைத்து பேசியதுடன் இதுதொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற்றுத் தருவதாக கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.எனினும் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் திட்கட்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மக்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement